இது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!

பிழைப்பு தேடி சென்ற தமிழரால் பெருமையடைந்த சிங்கப்பூர்

சென்னை : தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இணைந்து முக்கிய தொடரில் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.

சிங்கப்பூர் அணி டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டியில் ஐந்து நாடுகளுடன் விளையாடியது. சிங்கப்பூர் அணிக்காக ஆடினார் சுரேந்திரன் சந்திரமோகன் என்ற தமிழர்.

இந்த தொடரில் சிங்கப்பூர் அணி முதல் இடம் பெற்று கோப்பை வென்றது. அதற்கு முக்கிய காரணம் சுரேந்திரன் தான்.

ஐந்து நாடுகள்

ஐந்து நாடுகள்

டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டித் தொடரில் சிங்கப்பூர், நேபாள், கத்தார், குவைத், மலேசியா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்றன. இந்த தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச டி20 போட்டிகளாக நடந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

மூன்று போட்டிகளில் வெற்றி

மூன்று போட்டிகளில் வெற்றி

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு போட்டிகளில் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதின. இதில் சிங்கப்பூர் - குவைத் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அது தவிர மீதமிருந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சிங்கப்பூர் அணி ஏழு புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து கோப்பையை வென்றது.

சுரேந்திரன் அட்டகாசம்

சுரேந்திரன் அட்டகாசம்

சுரேந்திரன் சந்திரமோகன் இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் தன் அணியில் அதிக ரன்கள் எடுத்து அசத்தினார். சிங்கப்பூர் அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய சுரேந்திரன் 3 டி20 போட்டிகளில் 105 ரன்கள் குவித்தார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.

யார் இந்த சுரேந்திரன்?

யார் இந்த சுரேந்திரன்?

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெருமகளூர் கிராமத்தில் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் சுரேந்திரன். அங்கே வேலை செய்யவே சென்றாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்து 2013ஆம் ஆண்டில் அந்த அணியில் சேர்ந்தார். பேட்ஸ்மேனாக தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வந்த அவர், 2019 ஆசிய பகுதி உலகக்கோப்பை டி20 தொடரிலும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Surendran Chandramohan from Tamilnadu stars for Singapore cricket in T20 World Cup Asia Region final 2019.
Story first published: Thursday, August 1, 2019, 16:39 [IST]
Other articles published on Aug 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X