For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சின்ன தல… சின்ன தல தான்… ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்கள் கடந்து புதிய சாதனை

சென்னை:சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா புதிய சாதனையை படைத்தார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் இன்று சென்னையில் தொடங்கியது. தொடக்க போட்டியில் தோனியின் சென்னை அணியும், கோலியின் பெங்களூரு அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், ராயுடுவும் வந்தனர். வாட்சன் 10 பந்துகளை எதிர் கொண்டார். சாஹல் பந்தில் டக் அவுட்டானார்.

முதல் பந்தில் அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்.. அடுத்த பந்திலேயே கூல் செய்த ஹர்பஜன்!! முதல் பந்தில் அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்.. அடுத்த பந்திலேயே கூல் செய்த ஹர்பஜன்!!

வந்தார் ரெய்னா

வந்தார் ரெய்னா

பெங்களூரு அணிக்கு நம்பிக்கை பிறந்தது. அடுத்து களத்துக்கு வந்தார் ரெய்னா. இருவரும் நிதானமாக ஆடினர். நோபாலில் கிடைத்த ப்ரீ ஹிட் பந்துகளில் மேக்சிமம் ரன்களை எடுத்தனர்.

ரெய்னா சாதனை

ரெய்னா சாதனை

ஒரு கட்டத்தில் ரெய்னா, அருமையான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார். 15 ரன்களை எடுத்தால் 5,000 ஆயிரம் ரன்களை கடக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறலாம் என்ற சாதனைக்காக காத்திருந்தார்.

5,000 ரன்கள் முதல் வீரர்

5,000 ரன்கள் முதல் வீரர்

அதேபோல... இந்த போட்டியின் மூலம் 5,000 ரன்களை கடந்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைக்க காத்திருப்பது கோலி.

காத்திருப்பவர்கள் யார்?

காத்திருப்பவர்கள் யார்?

அவரை தொடர்ந்து, ரோகித் சர்மா 4493 ரன்களுடன் இந்த சாதனையை நடப்பு தொடரில் படைப்பாரா என்று தெரியவில்லை. ரெய்னாவின் இந்த புதிய சாதனையால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சின்ன தல... சின்ன தல என்று அரங்கத்தில் குரலெழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Story first published: Saturday, March 23, 2019, 22:56 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
Suresh raina becomes first batsman to reach 5000 ipl runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X