For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரால் தான் 2011 உலகக்கோப்பை வென்றோம்.. யுவராஜ் இல்லை.. வேறு ஒருவரை கைகாட்டிய ரெய்னா!

மும்பை : 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றி இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வெற்றி. சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு மீண்டும் உலகக்கோப்பை கிடைத்தது.

Recommended Video

Suresh Raina credits Sachin for 2011 World cup victory.

அந்த வெற்றியின் முடிவில் சச்சின் டெண்டுல்கரை இந்திய வீரர்கள் தோளில் சுமந்து சென்ற காட்சியையும் அத்தனை எளிதில் மறக்க முடியாது.

அந்த உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமே சச்சின் டெண்டுல்கர் தான். அவரால் தான் அந்த உலகக்கோப்பையை வென்றோம் என கூறி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

வலது கன்னத்தில் முத்தம்.. தலையில் ஒரு தட்டு.. எப்படி மாட்டிட்டிருக்காங்க பாருங்க மித்தாலி ராஜ்வலது கன்னத்தில் முத்தம்.. தலையில் ஒரு தட்டு.. எப்படி மாட்டிட்டிருக்காங்க பாருங்க மித்தாலி ராஜ்

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டை செய்து இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. எனினும், லீக் சுற்றில் மற்ற போட்டிகளில் வெற்றி பெற்று, அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தோனி அடித்த சிக்ஸ்

தோனி அடித்த சிக்ஸ்

இறுதிப் போட்டியில் இலங்கை அணியை சந்தித்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 274 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் யுவராஜ் சிங் ஆட வேண்டிய இடத்தில் பேட்டிங் இறங்கிய தோனி கடைசி வரை களத்தில் நின்று, சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

சச்சின் சொன்ன யோசனை

சச்சின் சொன்ன யோசனை

யுவராஜ் சிங்கிற்கு பதில் தோனியை களமிறங்க சொன்னது சச்சின் டெண்டுல்கர் தான். களத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை பேட்ஸ்மேன் இருந்தால் இலங்கை அணிக்கு பந்து வீசவும், பீல்டிங் நிறுத்தவும் சிரமம் ஏற்படும். தன் அனுபவத்தால் அந்த யோசனையை கூறினார் சச்சின்.

ஆல் - ரவுண்டர் யுவராஜ் சிங்

ஆல் - ரவுண்டர் யுவராஜ் சிங்

சச்சினின் அந்த யோசனை சரியாக வேலை செய்தது. உலகக்கோப்பை தொடர் முழுவதும் தன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் தொடர்ந்து வெற்றிகளை தேடிக் கொடுத்த யுவராஜ் சிங், கடைசி போட்டியில் கடைசி நேரத்தில் தோனிக்கு துணை நின்று வெற்றி தேடிக் கொடுத்தார்.

சச்சின் பேட்டிங்

சச்சின் பேட்டிங்

யுவராஜ் சிங் அந்த உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றாலும், சச்சின் பேட்டிங்கில் அந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்து இருந்தார். 9 போட்டிகளில் 482 ரன்கள் குவித்து இருந்தார். அவரது சராசரி 53ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 91.98 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சச்சினின் கடைசி உலகக்கோப்பை

சச்சினின் கடைசி உலகக்கோப்பை

அதுவே சச்சினின் கடைசி உலகக்கோப்பை தொடர். சச்சின் ஆறு உலகக்கோப்பை தொடரில் விளையாடி, கடைசியாக உலகக்கோப்பை வெற்றியை ருசித்தார். அதை குறிக்கும் வகையில் அந்த வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் சச்சினை தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.

அணியை வழிநடத்தினார்

அணியை வழிநடத்தினார்

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில், சச்சினின் எப்போதும் அமைதியாக இருப்பார் என்றும், தங்களை உலகக்கோப்பை வெல்ல முடியும் என நம்ப வைத்து வழி நடத்தியது அவர் தான் எனக் கூறினார்.

சச்சினின் அமைதி

சச்சினின் அமைதி

"சச்சினை பொறுத்த வரை, எப்போதும் அவரது அமைதியாக இருப்பார். அவரால் தான் நாங்கள் உலகக்கோப்பை வென்றோம்" என்றார் சுரேஷ் ரெய்னா. இளம் வீரர்களை பதட்டமின்றி பார்த்துக் கொண்டதை இவ்வாறு ரெய்னா குறிப்பிட்டார்.

இரண்டாவது பயிற்சியாளர்

இரண்டாவது பயிற்சியாளர்

மேலும், "எங்களால் உலகக்கோப்பை வெல்ல முடியும் என அணியில் இருந்த அனைவரையும் நம்ப வைத்தது அவர் தான். அவர் அணியில் இரண்டாவது பயிற்சியாளர் போல இருந்தார்" என சச்சின் தன் அனுபவம் மூலம் இந்திய அணிக்கு உதவியதை குறிப்பிட்டார் சுரேஷ் ரெய்னா.

Story first published: Monday, May 4, 2020, 10:45 [IST]
Other articles published on May 4, 2020
English summary
Suresh Raina credits Sachin Tendulkar for 2011 World cup victory. He also says Sachin was like second coach to the team during world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X