For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீமை விட்டு தூக்கிட்டு எங்கிட்ட பேசவே இல்லை.. ரெய்னா அதிரடி.. அப்ப எம்எஸ்கே பிரசாத் சொன்னது பொய்யா?

மும்பை : தன்னை இந்திய அணியில் இருந்து நீக்கிய பின் அப்போதைய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தன்னிடம் பேசவேயில்லை என சுரேஷ் ரெய்னா அதிரடியாக கூறி உள்ளார்.

Recommended Video

Raina denies MSK Prasad | ரெய்னா அதிரடி.. பிரசாத் சொன்னது பொய்யா?

முன்னதாக எம்எஸ்கே பிரசாத் தான் சுரேஷ் ரெய்னாவை அறைக்கு அழைத்து அவரை ஏன் நீக்கினோம், எப்படி மீண்டும் அணிக்கு வருவது என அனைத்தையும் விளக்கியதாக கூறி இருந்தார்.

அதை சுரேஷ் ரெய்னா மறுத்துள்ள நிலையில், எம்எஸ்கே பிரசாத் கூறிய "கதை" அனைத்தும் பொய்யா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அம்மா இருந்தா எல்லாமே இருக்கறதாதான் அர்த்தம்... உருகும் சுரேஷ் ரெய்னாஅம்மா இருந்தா எல்லாமே இருக்கறதாதான் அர்த்தம்... உருகும் சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் நீண்ட காலம் ஆடியவர். மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேனாக இடம் பிடித்து ஆடி வந்தார். தோனி கேப்டனாக இருந்த போது அணியில் மறுக்க முடியாத வீரராக வலம் வந்தார். பின்னர் கேப்டன்சி மாறிய போது அவரது நிலையும் மாறியது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

2017 முதல் அணியில் இடம் பெற போராடி வந்தார். இடையே ஒருநாள் அணியில் நீக்கப்பட்டு, டி20 அணியில் மட்டும் இடம் பெற்று இருந்தார். கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆடினார். அப்போது பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின் நடந்த 2019 ஐபிஎல் தொடரிலும் சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதையடுத்து அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதால் இந்திய அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

ரெய்னா கேள்வி

ரெய்னா கேள்வி

தன்னை அணியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை தன்னிடம் யாரும் கூறவில்லை எனவும், தேர்வுக் குழுவினர் என்ன தவறு என சொன்னால் தான் அதை சரி செய்து மீண்டும் அணியில் இடம் பெற முடியும். ஆனால், அப்படி எதுவுமே சொல்லவில்லை என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

எம்எஸ்கே பிரசாத் பதில்

எம்எஸ்கே பிரசாத் பதில்

அதன் பின்னர் முன்னாள் தேர்வுக் குழு எம்எஸ்கே பிரசாத் சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் அளித்தார். அவர் கூறுகையில், தான் ரெய்னாவிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், எப்படி எதிர்காலத்தில் அணியில் இடம் பெறுவது என அவரிடம் விளக்கியதாகவும் கூறினார்.

ரெய்னா அதிரடி பதில்

ரெய்னா அதிரடி பதில்

இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் இர்பான் பதானுடன் உரையாடிய சுரேஷ் ரெய்னா, எம்எஸ்கே பிரசாத் தன்னை அணியில் இருந்து நீக்கிய பின் தன்னிடம் எதுவுமே பேசவில்லை என அதிரடியாக கூறி உள்ளார். மேலும், தனக்கான நேரம் வரும் போது தான் சிறப்பாக செயல்படுவேன் எனவும் பிரசாத்துக்கு பதில் கூறி உள்ளார்.

எல்லாமே பொய்யா?

எல்லாமே பொய்யா?

எம்எஸ்கே பிரசாத் நீக்கத்துக்குப் பின் பேசியதாக கூறியதை சுரேஷ் ரெய்னா மறுத்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எம்எஸ்கே பிரசாத் தன் அறைக்கு அழைத்தேன், பேசினேன் என சொன்னது எல்லாமே பொய்யா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதே புகார்

இதே புகார்

வீரர்கள் பலர் தங்களை நீக்கிய பின் தேர்வுக் குழு தங்களிடம் பேசவில்லை என கூறுவதும், அதற்கு எம்எஸ்கே பிரசாத் தான் பேசி விளக்கம் அளித்தேன் என கூறுவதும் புதிதல்ல. இதற்கு முன் முரளி விஜய், கருண் நாயர், கேதார் ஜாதவ் என பல வீரர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, May 10, 2020, 17:19 [IST]
Other articles published on May 10, 2020
English summary
Suresh Raina denies MSK Prasad, said He didn’t speak to me after axing from Indian team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X