For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திரும்ப வருவேன்...! டுவிட்டரில் தெம்பாக பதிலளித்த சின்ன தல..! வாழ்த்து சொன்ன வாட்சன்

மும்பை: முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சின்ன தல சுரேஷ் ரெய்னா விரைவில் குணம் பெற வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வீரருமான சுரேஷ் ரெய்னா 6 வார காலங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு வெள்ளிக்கிழமையன்று ஆம்ஸ்டர் டாமில் முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதனையடுத்து அவர் மீண்டு வர குறைந்தது 6 வார கால சிகிச்சை, பயிற்சிகள் தேவைப் படுவதால் கிரிக்கெட்டிலிருந்து குறுகிய காலத்துக்கு விலகியுள்ளார் சுரேஷ் ரெய்னா. அந்த அறுவை சிகிச்சை மற்றும் விலகினால் சுரேஷ் ரெய்னா 2019-20 உள்நாட்டு தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 போட்டிகளில் இல்லை

போட்டிகளில் இல்லை

இதனால்தான் துலிப் கோப்பை அணிகளான இந்தியா, ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா க்ரீன் அணிகள் எனஅவர் எதிலும் இடம்பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான வாட்சன், அறுவசை சிகிச்சை செய்துள்ள சுரேஷ் ரெய்னா விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ரெய்னா விளக்கம்

இந்நிலையில் தனது அறுவை சிகிச்சை குறித்து ரெய்னா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறுவை சிகிச்சைக்கு பின் குணமாகி வருகிறேன். மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் விரைவில் குணமடைய வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

 விடாத பிரச்னை

விடாத பிரச்னை

முழங்கால் பிரச்னை 2007ம் ஆண்டு ஏற்பட்டது. அந்த தருணத்தில்அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். ஆனால் சில ஆண்டுகளாக மீண்டும் அதே பிரச்னை.

 ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்

ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்

கடும் வலி. இதனால் 2வது முறையாக அறுவை சிகிச்சை. கடினமான ஒன்று. சிகிச்சைக்கு பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். எனவே, மீண்டும் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

 பிசிசிஐ டுவிட்டர்

பிசிசிஐ டுவிட்டர்

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு மூட்டு ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, August 11, 2019, 19:12 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
Suresh raina explains about his health condition.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X