ஷிகர் தவானை ஏன் இந்திய அணியில் சேர்க்கல? கார்த்திக்கால் முடிந்தால் தவானால் முடியாதா? - ரெய்னா கேள்வி

மும்பை: தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20 அணியில் ஷிகர் தவானை இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை என்று சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

ஆனால் கேஎல் ராகுலின் வருகைக்கு பிறகு ஷிகர் தவானின் இடம் காலியானது, கடந்த டி20 உலககோப்பையில் கூட தவான் இடம்பெறவில்லை.

வர்ணனையாளர் டூ கிரிக்கெட் வீரர்- தினேஷ் கார்த்திக் சாதித்தது எப்படி? வெற்றி ரகசியம் இது தான்வர்ணனையாளர் டூ கிரிக்கெட் வீரர்- தினேஷ் கார்த்திக் சாதித்தது எப்படி? வெற்றி ரகசியம் இது தான்

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

துபாயில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு தொடக்க ஆட்டக்காரர் ராகுலின் சொதப்பல் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ஷிகர் தவான் அணியில் இருந்திருந்தால், அவர் காப்பாற்றி இருப்பார் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, ஷிகர் தவான் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்த தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றார்.

460 ரன்கள்

460 ரன்கள்

ஆனால், அதன் பிறகு டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய தவான், சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம் கிடைக்க முயற்சி செய்தார். 14 போட்டியில் விளையாடிய அவர் 460 ரன்களை விளாசினார். சராசரியாக 38 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்படவில்லை.

ரெய்னா கேள்வி

ரெய்னா கேள்வி

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியில் ஷிகர் தவானை தேர்வு செய்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அணிக்காக விளையாட கூடியவர். எப்போதும் ஜாலியாக இருப்பார். மற்றவர்களையும் ஜாலியாக வைத்திருப்பார் தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்றால் ஏன் ஷிகர் தவானால் முடியாது என்றும் ரெய்னா கேள்வி எழுப்பினார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்தும், ரோகித் இல்லாத நிலையில் தவானை தென்னாப்பிரிக்க தொடரில் சேர்த்திருக்கலாம் என்பது நியாயமான விசயம். ஆனால், ரோகித் திரும்பினால், தொடக்கத்தில் தவானுக்கு இடம் இருக்காது. இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்குழுவினர் ருத்துராஜ்க்கும், இஷான் கிஷனுக்கும் வாய்ப்பு வழங்கி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Suresh raina feels Shikhar dhawan should picked in Indian team
Story first published: Monday, May 23, 2022, 8:31 [IST]
Other articles published on May 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X