For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலைப்பயிற்சியில் ஈடுபட்ட முன்னணி வீரர்கள்... உற்சாகமான பயிற்சி என மகிழ்ச்சி

டெல்லி : சர்வதேச அளவில் 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர்கள் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷர்துல் தாக்கூர், சத்தீஸ்வர் புஜாரா, உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சியை ஏற்கனவே துவக்கியுள்ளனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, முகமது ஷமி ஆகியோரும் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்யக் கூடாத விஷயத்தை செய்த இங்கிலாந்து வீரர்.. படம் போட்டு காட்டிக் கொடுத்த டிவி.. பரபர சம்பவம்!செய்யக் கூடாத விஷயத்தை செய்த இங்கிலாந்து வீரர்.. படம் போட்டு காட்டிக் கொடுத்த டிவி.. பரபர சம்பவம்!

செப்டம்பர் 26ல் துவங்க பிசிசிஐ திட்டம்

செப்டம்பர் 26ல் துவங்க பிசிசிஐ திட்டம்

சர்வசேத அளவில் 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி துவக்க பிசிசிஐ முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

ரெய்னா, சாவ்லா, ஷமி பயிற்சி

ரெய்னா, சாவ்லா, ஷமி பயிற்சி

இது ஒருபுறமிருக்க, கிரிக்கெட் வீரர்கள் ஷர்துல் தாக்கூர், சத்தீஸ்வர் புஜாரா ஆகியோர் தங்களது வலைப்பயிற்சிகளை ஏற்கனவே துவக்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா மற்றும் முகமது ஷமி ஆகியோரும் தங்களது வலைப்பயிற்சிகளை துவக்கியுள்ளனர். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தன்னுடைய டிவிட்டர் பக்க்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் உற்சாகப் பதிவு

டிவிட்டரில் உற்சாகப் பதிவு

தன்னுடைய பயிற்சி ஆட்டம் குறித்து டிவிட்டரில் ரெய்னா வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் ஷமி மற்றும் சாவ்லாவின் பந்து வீச்சை எதிர்கொண்டு தான் ஆடிய பேட்டிங்கை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஷமியின் வேகப்பந்து வீச்சு மற்றும் சாவ்லாவின் லெக் ஸ்பின்னிங்கை எதிர்கொண்டது குறித்து அவர் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.

கொண்டாட்டமான சின்ன சின்ன வெற்றி

கொண்டாட்டமான சின்ன சின்ன வெற்றி

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இது ஒரு நல்ல துவக்கம் என்று தெரிவித்துள்ள ரெய்னா, இந்த சின்ன சின்ன வெற்றிகளை கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷமி, சாவ்லா உள்ளிட்டவர்களுடன் நல்லபடியாக பயிற்சியில் நேரம் கழிவதாகவும் குறிப்பிட்ட அவர், ஷமியின் 150 கிலோ மீட்டர் வேக பந்துவீச்சுக்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, July 20, 2020, 13:57 [IST]
Other articles published on Jul 20, 2020
English summary
Had a great time being with the UP boys -Raina tweets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X