For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விமர்சனம் செஞ்சவங்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துருக்காரு சின்ன தல... ஆகாஷ் சோப்ரா பாராட்டு

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி கண்டுள்ளது.

ஆயினும் இந்த போட்டியில் 36 பந்துகளில் 54 ரன்களை குவித்து தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

இந்நிலையில் ரெய்னாவின் கம்-பேக் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2வது போட்டி

2வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் நேற்றைய தினம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பௌலிங்கில் சொதப்பல்

பௌலிங்கில் சொதப்பல்

முதலில் களமறங்கிய சிஎஸ்கே 188 ரன்களை அடித்து அபாரமான துவக்கத்தை தந்தநிலையிலும் பௌலங்கில் அதிரடியை அந்த அணி நிரூபிக்க தவறியதை அடுத்து சிஎஸ்கே தொடரின் முதல் போட்டியில் தோல்வியை அடைந்துள்ளது. அணியில் சுரேஷ் ரெய்னா அதிரடியாக 54 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

பல்வேறு தரப்பினர் கேள்வி

பல்வேறு தரப்பினர் கேள்வி

கடந்த சீசனில் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறிய ரெய்னா, கடந்த 2 ஆண்டுகளில் சையத் முஸ்தாக் அலி தொடரில் மட்டுமே விளையாடினார். வேறு எந்த போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

அனைவருக்கும் பதிலடி

அனைவருக்கும் பதிலடி

ஆயினும் தன்னுடைய நேற்றைய ஆட்டத்தின்மூலம் அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார் ரெய்னா. இதனிடையே ரெய்னா அமைதியாக இருந்து அவர்களுக்கு தான் சிறப்பான திறமையுடன் இருப்பதை உணர்த்தியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அணிக்கு சிறப்பாக அமையும்

அணிக்கு சிறப்பாக அமையும்

22 பந்துகளில் 25 ரன்களை குவித்த ரெய்னா, தொடர்ந்து தன்னுடைய அதிரடியை நிரூபித்ததாக சோப்ரா கூறியுள்ளார். குறிப்பாக அஸ்வினின் அதிரடி பௌலிங்கை ஒன்றுமில்லாமல் ரெய்னா செய்துள்ளதாகவும் இதேபோல ரெய்னா தொடர்ந்து விளையாடினால் அவரது அணிக்கு அது சிறப்பாக அமையும் என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார்.

விரைவில் அவுட்டாக்க வேண்டும்

விரைவில் அவுட்டாக்க வேண்டும்

மேலும் எதிரணியின் ஸ்பின்னர்கள் ரெய்னாவிடம் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என்றும் சோப்ரா கூறியுள்ளார். அவர் மிகவும் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவரைதடுக்க விரும்பினால் வேகப்பந்து வீச்சின்மூலம் அவரை விரைவிலேயே அவுட் ஆக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த ஆண்டு அவரை தடுக்க முடியாது என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 11, 2021, 20:05 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
One thing is clear that spin needs to be careful against him -Chopra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X