For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜான்டி ரோட்ஸ்-இன் சிறந்த பீல்டர் வரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர்.. யாரு தெரியுமா?

Recommended Video

ரோட்ஸ்-இன் சிறந்த பீல்டர் வரிசையில் முதல் இடம் பிடித்த ரெய்னா- வீடியோ

துபாய் : உலகின் சிறந்த பீல்டர் என இன்று வரை அறியப்படும் ஜான்டி ரோட்ஸ் சிறந்த ஐந்து பீல்டர்களை வரிசைப்படுத்தி உள்ளார்.

ஜான்டி ரோட்ஸ் குறிப்பிட்டுள்ள ஐந்து வீரர்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியாவில் இருந்து தலா ஒருவரும், தென்னாப்பிரிக்காவில் இருந்து இரு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில், முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஒரு இந்திய வீரர். யார் அவர்?

சுரேஷ் ரெய்னா முதல் இடம்

ஜான்டி ரோட்ஸ்-இன் ஐந்து சிறந்த பீல்டர்கள் வரிசையில் சுரேஷ் ரெய்னா முதல் இடத்தை பிடித்துள்ளார். இது பற்றி கூறுகையில், "சுரேஷ் ரெய்னா ஆடத் துவங்கியது முதலே நான் அவரின் பெரிய ரசிகன்" என கூறினார்.

மற்ற நான்கு வீரர்கள்

மற்ற நான்கு வீரர்கள்

இந்த வரிசையில் ஐந்தாம் இடத்தை ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், நான்காம் இடத்தை ஹெர்ஷல் கிப்ஸ், மூன்றாம் இடத்தை பால் கோலிங்வுட், இரண்டாம் இடத்தை ஏபி டி வில்லியர்ஸ் பிடித்துள்ளனர்.

ஏன் முதல் இடம்?

ஏன் முதல் இடம்?

சுரேஷ் ரெய்னாவுக்கு ஏன் முதல் இடம் கொடுத்தார் ஜான்டி ரோட்ஸ்? சுரேஷ் ரெய்னா ஜான்டி ரோட்ஸ் போலவே டைவ் அடிக்க யோசிப்பதில்லை என்பது தான் அதற்கு காரணம் என கூறியுள்ளார்.

இரண்டாவது யோசனை இல்லை

இரண்டாவது யோசனை இல்லை

ஜான்டி ரோட்ஸ் கூறுகையில், இந்தியாவின் மைதானங்கள் மோசமாக இருக்கும். அங்கே பீல்டிங் செய்வது எளிதல்ல. ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் போதும் அவர் டைவ் அடிக்கிறார். அவருக்கு டைவ் அடிக்கலாமா? வேண்டாமா? என இரண்டாவது யோசனையே இல்லை. பந்தை நோக்கி அவர் பாய்ந்து விடுகிறார். இது தான் எனது கொள்கையும் என குறிப்பிட்டார்.

ரெய்னா மகிழ்ச்சி

ரெய்னா ஜான்டி ரோட்ஸ் தனக்கு முதல் இடம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவு போட்டுள்ளார். நீங்கள் பீல்டிங்கில் சிறந்தவராக இருந்து எனக்கு தூண்டுகோலாக இருந்தீர்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

Story first published: Wednesday, February 13, 2019, 19:13 [IST]
Other articles published on Feb 13, 2019
English summary
Fielding great Jonty Rhodes rated Suresh Raina as best fielder in the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X