For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடினமான உழைப்ப கொடுங்க... எதுக்காகவும் விட்டு கொடுக்காதீங்க... ரெய்னா அட்வைஸ்

டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போட்டிகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சில வீரர்கள் தங்களது நெட் பயிற்சியை துவக்கியுள்ளனர். இந்நிலையில் காசியாபாத்தில் நடைபெற்ற வலை பயிற்சியில் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. மருத்துவமனையில் அனுமதி.. பரபர தகவல்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. மருத்துவமனையில் அனுமதி.. பரபர தகவல்

வலைபயிற்சியில் வீரர்கள்

வலைபயிற்சியில் வீரர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்தப்படலாம் என்று கூறப்படும் நிலையில் சில வீரர்கள் தங்களது வலைப்பயிற்சியை துவக்கியுள்ளனர்.

சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த் பங்கேற்பு

சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த் பங்கேற்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள இந்திய வீரர்கள் சத்தீஸ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்களது வலைப்பயிற்சிகளை கடந்த மாதத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து தற்போது சுரேஷ் ரெய்னா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் காசியாபாத்தில் வலைப்பயிற்சியை துவங்கியுள்ளனர்.

பலன் கண்டிப்பா கிடைக்கும்

பலன் கண்டிப்பா கிடைக்கும்

கடந்த 2018 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத ரெய்னா, தன்னுடைய வலைபயிற்சி குறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடினமாக உழைப்பை கொடுக்கவும் எதையும் விட்டுக் கொடுக்காதீர்கள் எனவும் இதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் ரெய்னா மேலும் கூறியுள்ளார்.

ரிஷப் பந்த் உற்சாகம்

ரிஷப் பந்த் உற்சாகம்

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வலைபயிற்சியை தான் மிகவும் என்ஜாய் செய்ததாக ரெய்னா கூறியுள்ளார். இந்நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ரிஷப் பந்தும் இந்த பயிற்சியில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டார்.

Story first published: Tuesday, July 14, 2020, 19:50 [IST]
Other articles published on Jul 14, 2020
English summary
India cricketers Rishabh Pant and Suresh Raina hit the nets, resuming practice after the prolonged COVID-19 forced break
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X