பரிதாபமாக போன தீபக் சஹாரின் நியூ லுக்.. சுரேஷ் ரெய்னா போட்ட ஒற்றை கமெண்ட்..நெட்டிசன்களுக்கு விருந்து

ஆக்ரா: சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரின் நியூ லுக்கிற்கு, சுரேஷ் ரெய்னா போட்டுள்ள கமெண்ட் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் பலரும் வீடுகளில் தனிமையில் உள்ளனர்.

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்

இந்திய அணி அடுத்ததாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அதற்காகவும் தயாராகி வருகின்றனர். இதில் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்தி வந்தார். பின்னர் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட தொடங்கினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய அவர் 8 விக்கெட்களை எடுத்துள்ளார். அவரின் சராசரி 8.04 ரன்கள் ஆகும். இதனால் அடுத்து வரவிருக்கும் இலங்கை சுற்றுப்பயணத்தில் தீபக் சஹார் கண்டிப்பாக இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கெட் அப்

புதிய கெட் அப்

இந்நிலையில் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் தீபக் சஹார் தனது லுக்கை மாற்றியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தில், சற்று உடலை ஏற்றி கருப்பு நிற டி சர்ட் மற்றும் மொட்டை தலை போன்ற கெட்டப்பில் உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், சூர்யாவின் கஜினி திரைப்பட லுக்கை போன்றே உள்ளது என கிண்டலடித்து வருகின்றனர்.

ரெய்னாவின் கமெண்ட்

ரெய்னாவின் கமெண்ட்

சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் லாக்டவுனில் தனது நியூ லுக்கின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அந்த பதிவுக்கு போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 கிண்டலடித்த ரெய்னா

கிண்டலடித்த ரெய்னா

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவும் கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரெய்னா, ஃபேமிலி மேன் தொலைக்காட்சி தொடரின் 3வது பாகத்திற்கு தயாராகின்றாயா எனக்கேட்டு கிண்டல் செய்துள்ளார். ஃபேமிலி மேன் என்பது பிரபல இந்தி தொடராகும். ரெய்னாவின் இந்த கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்து , சாக்லெட் பாய் போன்று சுற்றி வந்த சஹாரை கஜினியாய் மாறிவிட்டாரே என்று பதிவிட்டு வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK Pacer Deepak Chahar’s Posted a photo of his new look, and Suresh Raina’s Hilarious comment on it
Story first published: Thursday, June 10, 2021, 17:52 [IST]
Other articles published on Jun 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X