தோனி - ரெய்னா நட்புக்கு வந்த சோதனை.. தீயாய் பரவிய விமர்சனங்கள்.. மனவேதனையுடன் பகிர்ந்துள்ள ரெய்னா!

மும்பை: இந்திய அணியில் தொடர்ந்து தான் இடம் பிடிக்க தோனி செய்த உதவிகளை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னா - தோனி நட்பு குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. கிரிக்கெட்டிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் இருவரும் மிக நெருக்கமானவர்கள் ஆவர்.

இவர்கள் இருவரின் நட்பு குறித்து பாராட்டுக்கள் ஒருபுறம் வந்தாலும், விமர்சனங்களும் அதிகளவில் வந்தது என்றே கூற வேண்டும்.

 'எங்கள் உயிர் நட்புக்கு ஐபிஎல் முக்கிய காரணம்' - தோனி குறித்து ரெய்னா உருக்கம் 'எங்கள் உயிர் நட்புக்கு ஐபிஎல் முக்கிய காரணம்' - தோனி குறித்து ரெய்னா உருக்கம்

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னா தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் மனதையும் வென்றார். இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக வேகமாக சரிந்த போதெல்லாம், தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி பல முறை காப்பாற்றியுள்ளது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தோனியின் மனநிலையை புரிந்துக்கொண்டு அவருக்கு ஏற்ற சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்க கூடியவர் ரெய்னாவே ஆகும்.

பரவிய விமர்சனங்கள்

பரவிய விமர்சனங்கள்

இந்திய அணியில் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னராகவும் பல முறை சுரேஷ் ரெய்னா உதவி செய்துள்ளார். ஆனால் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் திடீரென கடந்தாண்டு தோனியுடன் சேர்ந்து தனது ஓய்வு அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். ஆனால் இன்றும் தோனியால் தான் ரெய்னாவுக்கு இந்திய அணியில் கிடைத்து வந்தது. தோனி ஓய்வு பெற்றால் இனி வாய்ப்பு கிடைக்காது என்று தான் ரெய்னாவும் ஓய்வு பெறுகிறார் என்ற கருத்து பரவி வருகிறது.

 ரெய்னா மனவேதனை

ரெய்னா மனவேதனை

இந்நிலையில் அந்த விமர்சனங்கள் குறித்து ரெய்னா மன வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து ‘பிலீவ்' என்ற தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அணியில் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்ததற்கு, தோனியுடைய நெருங்கிய நண்பன் என்பது தான் காரணம் என்ற கருத்துக்கள் மன வேதனையாக இருந்தது. தோனியிடம் நம்பிக்கையை சம்பாதிக்க நான் எந்த அளவிற்கு கடினமாக உழைத்தேனோ அதே போலத்தான் இந்திய அணியில் இடம் பெறவும் நான் கடினமாக உழைத்தேன்.

உழைப்பு தான் காரணம்

உழைப்பு தான் காரணம்

எனக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது மஹேந்திர சிங் தோனிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் நானும் அவரை முழுமையாக நம்பினேன். முழுக்க முழுக்க என்னுடைய திறமையாலும், உழைப்பாலும் தான் இந்திய அணியில் இடம் பிடித்தேன் என மன வேதனையுடன் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்திய அணிக்காக 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5,615 ரன்களை அடித்துள்ளார். அதே போல 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,605 ரன்களையும அடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்காக ஆடி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Indian Player Suresh Raina Shares about tha Criticises in career, he says Dhoni knew how to get best out of him
Story first published: Thursday, June 10, 2021, 17:18 [IST]
Other articles published on Jun 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X