For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமாருக்கா இந்த நிலைமை??.. 2வது ஒருநாள் போட்டி தான் கடைசி.. பிசிசிஐ விடுத்த மறைமுக எச்சரிக்கை!

ராய்பூர்: 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் இடம்பெறுவதற்கான கடைசிகட்ட வாய்ப்புகளுக்கு சூர்யகுமார் யாதவ் சென்றுள்ளதாக தெரிகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி ராஜ்பூரில் உள்ள சாஹீத் வீர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதும், நியூசிலாந்து அணி 337 ரன்கள் வரை விரட்டி கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது.

யார் இந்த மைக்கேல் பிராஸ்வெல்.. சூறாவளி போல் சுழன்றது முதல் முறை அல்ல.. தப்பு செய்த ஐபிஎல் அணிகள் யார் இந்த மைக்கேல் பிராஸ்வெல்.. சூறாவளி போல் சுழன்றது முதல் முறை அல்ல.. தப்பு செய்த ஐபிஎல் அணிகள்

சூர்யகுமாருக்கான வாய்ப்பு

சூர்யகுமாருக்கான வாய்ப்பு

இதனால் அந்த வெற்றியை தொடர இந்திய அணியும், தோல்விக்கு பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு கண்டம் ஏற்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் நம்.1 பேட்டராக உள்ள அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பிசிசிஐ-ன் நம்பிக்கையை பெறவே இல்லை.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். அதன்பின்னர் நியூசிலாந்து அணியில் கே.எல்.ராகுல் விலகியதால் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் முதல் போட்டியில் அவரால் வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியவில்லை. அதிரடியாக 31 ரன்களை மட்டும் சேர்த்து மோசமாக அவுட்டானார்.

இறுதி வாய்ப்பு

இறுதி வாய்ப்பு

இந்நிலையில் நியூசிலாந்துடனான 2வது ஒருநாள் போட்டி சூர்யகுமாருக்கு கடைசி வாய்ப்பை போன்று அமைந்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்ட ராஜத் பட்டிதார் வாய்ப்புக்காக காத்துள்ளார். ஒருவேளை சூர்யகுமார் யாதவ் மீண்டும் ரன் அடிக்க தவறினால், 3வது போட்டியிலாவது பட்டிதாருக்கு வாய்ப்பு தந்தாக வேண்டிய சூழல் எற்படும்.

4 மாதங்கள் ஆகும்

4 மாதங்கள் ஆகும்

நியூசிலாந்து தொடருக்கு பின்னர் இந்தியாவுக்கு ஒருநாள் போட்டிகளே கிடையாது. ஏனென்றால் அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. அது முடிந்தவுடன் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வந்துவிடும். 4 மாதங்களுக்கு பிறகு மே மாதத்தில் தான் ஆஸ்திரேலியாவுடன் 50 ஓவர் கிரிக்கெட் நடைபெறுகிறது. அதற்குள் அனைத்து வீரர்களும் அணிக்குள் வந்துவிடுவார்கள் என்பதால் இதுதான் சூர்யகுமாருக்கு கடைசி வாய்ப்பு.

Story first published: Thursday, January 19, 2023, 20:23 [IST]
Other articles published on Jan 19, 2023
English summary
No.1 T20 batter Suryakumar yadav got a big trouble on India vs new zealand 2nd ODI match, here is the reason behind it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X