For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பலே ஆளுங்க நீங்க... ரோகித் சர்மாவுக்கு மறைமுகமாக செக் வைத்த சூர்யகுமார்.. இதை கவனிச்சீங்களா??

ஐதராபாத்: ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பின் ரோகித் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் மறைமுக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 - 1 எனக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சொன்ன ஒற்றை வார்த்தை.. கட்டுப்பட்டு நடந்த விராட் கோலி.. 3வது டி20ல் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ரோகித் சொன்ன ஒற்றை வார்த்தை.. கட்டுப்பட்டு நடந்த விராட் கோலி.. 3வது டி20ல் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

டி20 தொடர்

டி20 தொடர்

இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 186/ 7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி ஜோடி காப்பாற்றினர். சீரான வேகத்தில் ரன் குவித்த கோலி 48 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். மறுமுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 69 ரன்களை விளாசி அசத்தினார்.

சூர்யகுமார் யாதவின் பேச்சு

சூர்யகுமார் யாதவின் பேச்சு

இந்நிலையில் அதிரடிக்கு பின் சூர்யகுமார் யாதவ் தனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார். அதில், இந்த போட்டியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்பே யோசித்திருந்தேன். அதன்படியே செயல்பட்டேன். எனது வழக்கமான 2 - 3 ஷாட்களை ஆட நினைத்தேன், ஆனால் மிட் ஆஃப் திசையில் அடித்து பழக வேண்டும் என்பதற்காகவே அங்கு பவுண்டரிகளை அடித்தேன்.

மிகவும் பிடித்துள்ளது

மிகவும் பிடித்துள்ளது

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4வது இடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தற்போது இந்த இடத்தில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என நம்பிக்கை உள்ளது. 4வது வீரராக விளையாடும் போது பல கடினமான சூழல்களும் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றினை சவாலாக கருதி சாதிப்பது நன்றாக உள்ளது எனக் கூறினார்.

மறைமுக கோரிக்கைகள்

மறைமுக கோரிக்கைகள்

இதன் மூலம் சூர்யகுமார் யாதவ், தனக்கு தொடர்ந்து 4வது இடத்தை கொடுக்குமாறு மறைமுகமாக கோரிக்கை வைப்பதாக தெரிகிறது. கடந்த 5 - 6 மாதங்களாக சூர்யகுமார் யாதவ் கலக்கி வருகிறார். எனினும் சில போட்டிகளில் அவரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எனவே அதனை சரிசெய்ய பயன்படுத்திக் கொண்டார் எனத் தெரிகிறது.

Story first published: Monday, September 26, 2022, 17:21 [IST]
Other articles published on Sep 26, 2022
English summary
Suryakumar yadav's Speech after Team india beats Australia in 3rd T20 Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X