For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் சொன்னதத்தான் கண்ணை மூடிக்கிட்டு செஞ்சேன்... அது நல்லா வொர்க்-அவுட் ஆச்சு

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆலோசனையை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் அது தனக்கு சிறப்பாக கைகொடுத்ததாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 47 பந்துகளில் 79 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரோட எதிரிதான்.. இருந்தாலும் என்ஜாய் பண்ணி விளையாடினேன்.. வார்னர் சிலிர்ப்பு ஆஷஸ் தொடரோட எதிரிதான்.. இருந்தாலும் என்ஜாய் பண்ணி விளையாடினேன்.. வார்னர் சிலிர்ப்பு

வெற்றிகளுக்கு காரணமான யாதவ்

வெற்றிகளுக்கு காரணமான யாதவ்

ஐபிஎல் 13வது சீசன் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி முன்னிலையில் உள்ளது. அணி சார்பில் துவக்க வீரராக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியின் வெற்றிகளுக்கு காரணமாக உள்ளார்.

79 ரன்களை குவித்து அபாரம்

79 ரன்களை குவித்து அபாரம்

கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 79 ரன்களை குவித்து, அணியின் எளிதான வெற்றிக்கும் அவர் காரணமானார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தான் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதாகவும் ஆனால் தனக்கான அங்கீகாரம் இந்திய அணியில் கிடைக்கவில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்யகுமார் ஆட்டம் குறித்து புகழ்ச்சி

சூர்யகுமார் ஆட்டம் குறித்து புகழ்ச்சி

இதே கருத்தை முன்னாள் வீரர் இர்பான் பதானும் வெளியிட்டுள்ளார். சிறப்பான வீரர் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம்கிடைக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதேபோல, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

கண்ணைமூடி பின்பற்றுகிறேன்

கண்ணைமூடி பின்பற்றுகிறேன்

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்தின் அறிவுரைகளை தான் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதாக சூர்யகுமார் தெரிவித்துள்ளார். ரோகித்துடன் பேசும் ஒவ்வொரு சமயத்திலும் தான் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். சின்ன சின்ன விஷயங்களில்கூட ரோகித் சிறப்பாக உதவுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, October 9, 2020, 11:55 [IST]
Other articles published on Oct 9, 2020
English summary
I have trusted Rohit bhai's suggestions blindly -Suryakumar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X