டி 20 தொடரை திடீரென நிறுத்திய பிசிசிஐ… கலங்கி போன வீரர்கள்..! அந்த அதிர்ச்சி காரணம்

மும்பை: ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இந்திய அணி மோதுகிறது. 3 டி 20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

அந்த தொடர் நிறைவு பெற்றவுடன் தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுடன் இந்தியா மோதவிருக்கிறது. அதை தொடர்ந்து ஜனவரி மாதம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

ஓய்வை பத்தி முதல்ல தோனி பேசட்டும்... அப்புறம் நாம பேசலாம்..! முன்னாள் வீரர் 'நச்' கருத்து

தடை விதித்த ஐசிசி

தடை விதித்த ஐசிசி

அதற்கான அட்டவணைகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐசிசி விதிமுறையை மீறி, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடுகள் ஈடுபாடுகள் இருந்ததால், ஐசிசி தற்காலிக தடை விதித்தது.

நன்கொடைகள் நிறுத்தம்

நன்கொடைகள் நிறுத்தம்

ஐசிசி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையின் அடிப்படையில், ஜிம்பாப்வே அணியை ஐசிசி உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. மேலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுக்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் இனி நிறுத்தப்படும் என்றும் கூறியது.

தடைபட்ட தொடர்

தடைபட்ட தொடர்

அதன் எதிரொலியாக, ஜிம்பாப்வே அணி மற்ற அணிகளுடன் மோதவிருக்கும் அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்தியா, ஜிம்பாப்வே மோதவிருக்கும் தொடரும் தற்போது தடைபட்டு உள்ளது.

பிசிசிஐ வெளியிடுகிறது

பிசிசிஐ வெளியிடுகிறது

அதற்கான மாற்று ஏற்பாடுகளை அக்டோபருக்கு பின்னர், பிசிசிஐ வெளியிடுகிறது. அதற்குள் ஜிம்பாப்வே மீண்டும் ஐசிசி உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றால், தொடரில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

அட்டவணையில் மாற்றம்

அட்டவணையில் மாற்றம்

அக்டோபர் மாதம் ஐசிசி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் வருடாந்திர அட்டவணையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா? இல்லை, மாற்றங்கள் இல்லாமல் ஜிம்பாப்வே அணியுடன் தொடர் நடக்குமா? என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
T 20 cricket series agaisnt Zimbabwe stopped by BCCI.
Story first published: Monday, July 22, 2019, 21:36 [IST]
Other articles published on Jul 22, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X