For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ப முடியலையே! வரிசையாக 5 பந்தில் 5 விக்கெட்.. டி10 போட்டிகளில் நடந்த ஆச்சரிய சாதனை

ஷார்ஜா : டி10 லீக் எனப்படும் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

அந்த தொடரில் பல நம்ப முடியாத கிரிக்கெட் சாதனைகள் நிகழ்ந்து வருகிறது.

டி10 லீக் தொடரில் பெங்கால் டைகர்ஸ், நார்தர்ன் வாரியர்ஸ் ஆடிய போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்கள் விழுந்த ஆச்சரிய நிகழ்வு நடந்தது.

ஆச்சரிய சாதனைகள் நடக்கும் டி10

ஆச்சரிய சாதனைகள் நடக்கும் டி10

டி10 எனப்படும் ஒரு அணியின் இன்னிங்க்ஸுக்கு 10 ஓவர்கள் மட்டுமே கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாட்டில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் குறைந்த ஓவர்கள் என்பதால் பல ஆச்சரிய சாதனைகள் நடந்து வருகிறது.

பெங்கால் டைகர்ஸ் அட்டகாசம்

பெங்கால் டைகர்ஸ் அட்டகாசம்

பெங்கால் டைகர்ஸ், நார்தர்ன் வாரியர்ஸ் ஆடிய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் டைகர்ஸ் 10 ஓவர்களில் 130 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜேசன் ராய் 29 பந்துகளில் 60 ரன்களும், ரூதர்போர்டு 21 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர்.

நார்தர்ன் வாரியர்ஸ்-இன் கடின நிலை

நார்தர்ன் வாரியர்ஸ்-இன் கடின நிலை

அடுத்து ஆடிய நார்தர்ன் வாரியர்ஸ் அணி 7.5 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போதே அந்த அணி வெற்றி பெறுவது கடினம் என்ற சூழ்நிலை இருந்தது. எனினும், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முடிவு செய்தனர்.

வரிசையாக 5 பந்தில் 5 விக்கெட்கள்

வரிசையாக 5 பந்தில் 5 விக்கெட்கள்

அதன் விளைவாக அடுத்த ஐந்து பந்துகளில் 5 விக்கெட்கள் விழுந்தது. 7.6வது ஓவரில் நிக்கோலஸ் பூரன், அலி கானின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அமீர் யாமின் பந்து வீச வந்தார். அவர் பந்துவீச்சில் அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள் விழுந்தன. சைமண்ட்ஸ், ரோவ்மன் போவெல், ரவி போப்பரா, ஹார்டஸ் வில்ஜோன் ஆகிய நால்வரும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

16 பந்துகளில் 74 ரன்கள் அதிரடி

16 பந்துகளில் 74 ரன்கள் அதிரடி

நார்தர்ன் வாரியர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதே தொடரின் முதல் போட்டியில் ஆப்கன் வீரர் ஷாசாத் அதிரடியாக 16 பந்துகளில் 74 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகை திக்குமுக்காட வைத்தார். அதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

என்னய்யா இது? நாலே ஓவர்ல மேட்ச் முடிஞ்சுருச்சு!? 16 பந்தில் 74 ரன்கள் எடுத்த வீரர்

Story first published: Friday, November 23, 2018, 18:01 [IST]
Other articles published on Nov 23, 2018
English summary
T10 League Bengal Tigers take 5 wickets in 5 balls against Northern Warriors.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X