For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 வரலாற்றிலேயே முதல் முறையாக.. டையில் முடிந்த போட்டி!

நியூவெஜின்: டி20 வரலாற்றிலேயே முதல்முறையாக முடிவு அறிவிக்கப்படால் ஒரு டி20 போட்டி டையில் முடிவடைந்துள்ளது.

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு 20 ஓவர் போட்டிகள் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.

T20 ends in Tie

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கோயட்சர் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.

அடுத்ததாக களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டெர்லிங் அபாரமாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். கடைசி ஒவரில் ஷெரீப் சிறப்பாக பந்துவீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

இரு அணிகளும் 185 ரன்கள் எடுத்ததால் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி இப்போட்டி டையில் முடிவடைந்தது. 20 ஓவர் போட்டிகளில் முதல் முறையாக டை ஆன போட்டி இதுவேயாகும். இதற்கு முன்னர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 9 முறை போட்டி டையில் முடிந்துள்ளது மற்றும் ஒவ்வொரு முறையும் பௌல் அவுட் அல்லது சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு ஐசிசி, நாக் அவுட் போட்டிகளில் மட்டுமே சூப்பர் ஓவர் நடைமுறை படுத்தவேண்டும் என்று கூறிய காரணத்தால் நேற்றைய போட்டி முடிவு அறிவிக்கப்படாமல் டை ஆனது.



Story first published: Monday, June 18, 2018, 15:30 [IST]
Other articles published on Jun 18, 2018
English summary
Match Tied Between Ire Vs Scot without bowled super over in Netharlands.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X