For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 வருடங்களுக்கு பிறகு.. எல்லாம் மாறிடும்.. "ஓபன்" மீட்டிங்கில் "எச்சரித்த" டு பிளசிஸ்

மும்பை: உண்மையில் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளசிஸ், கிரிக்கெட்டை நேர்மையாக நேசிக்கும் காதலன் என்றே தோன்றுகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், பெஷாவர் சல்மி அணி வீரரும், தென்னாப்பிரிக்க கேப்டனுமான டு பிளசிஸ் சில சென்சிட்டிவான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

"ரவுசான" ஆல் ரவுண்டர்கள்.. இங்கிலாந்தின் விசித்திர "தலைவிதி".. யார் வச்ச "செய்வினை"யோ!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், பிஎஸ்எல் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூன் 9ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

உண்மையான அச்சுறுத்தல்

உண்மையான அச்சுறுத்தல்

இதுகுறித்து பிஎஸ்எல் தொடர் ஆன்லைன் மீட்டிங்கில் பேசிய டு பிளசிஸ், "டி20 லீக்குகள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தல். இவற்றின் வலிமை ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது, வெளிப்படையாக, ஆரம்பத்தில், உலகம் முழுவதும் வெறும் 2 லீக்குகள் மட்டுமே இருந்தன. இப்போது ஒரு வருடத்தில் 4,5, 6,7 லீக்குகளாக மாறி வருகிறது. டி20 தொடர்கள் இன்னும் வலுவடைகின்றன. இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும்

வீரர்கள் மாறி மாறி

வீரர்கள் மாறி மாறி

இன்னும் 10 வருடத்தில் கிரிக்கெட்டுக்கு கால்பந்து போட்டிகளை போல மாறிவிட வாய்ப்புண்டு. அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையேயான கால இடைவெளியில், பல்வேறு டி20 லீக் போட்டிகள் நடைபெறும் நிலை ஏற்படும். அங்கும் இங்கும் என உங்கள் அணியின் வீரர்கள் மாறி மாறி சென்று விளையாடுவார்கள்.

வீரர்களை இழந்துவிட்டது

வீரர்களை இழந்துவிட்டது

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பெரும்பாலான வீரர்கள் அனைவரும் சர்வதேச அணியிலிருந்து பல்வேறு டி20 போட்டிகளில் விளையாட செல்கின்றனர். எனவே அந்த அணி தங்களது முக்கிய வீரர்களை நிறைய இழந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவிலும் இப்போது நடக்கத் தொடங்குகிறது" என்று அதிரடியாக பேசியுள்ளார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

டு பிளசிஸின் இந்த கருத்துகளை சமூக தளத்தில் பலரும் வரவேற்றுள்ளனர். அவருடைய கவலையில் நேர்மையும், அர்த்தமும் உள்ளதாக பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கிரிக்கெட்டை நேசிக்கும் உண்மையான காதலன் என்று அவரை பாராட்டி வருகின்றனர். அதேசமயம், டி20 லீக் கிரிக்கெட் தொடர்களின் ஆதிக்கத்தையும், அதில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது.

Story first published: Monday, June 7, 2021, 18:05 [IST]
Other articles published on Jun 7, 2021
English summary
T20 leagues threat for cricket Faf du Plessis - டு பிளசிஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X