For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"பிளட்சர் சாமி" எங்களுக்காக டெய்லி பிரே பண்ணினார்... டேரன் சமி

கொல்கத்தா: முதலில் கடவுளுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆண்ட்ரே பிளட்சர் பாஸ்டராக இருந்து தினசரி எங்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார். அதன் வலிமையால்தான் நாங்கள் இன்று வெற்றி பெற முடிந்தது என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் டேரன் சமி கூறியுள்ளார்.

எங்களைப் பலர் கடுமையாக விமர்சித்தனர். மூளை இல்லாத கும்பல் என்று கூட ஒருவர் கூறினார். நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. மாறாக வெற்றியின் மூலம் அவர்களுக்குப் பொருத்தமான பதிலைக் கொடுத்துள்ளோம் என்றும் சமி கூறினார்.

இங்கிலாந்தை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வீழ்த்திய பின்னர் செய்தியாளர்களிடம் சமி பேசும்போது உணர்ச்சிகரமாக பேசினார். அவரது பேச்சிலிருந்து...

"பாஸ்டர்" பிளட்சர்

முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆண்ட்ரே பிளட்சர் பாஸ்டராக இருந்து எங்களுக்காக, அணிக்காக தினசரி பிராத்தனை செய்தார். அவருடன் இணைந்து அனைவரும் பிரார்த்தித்தோம். தொடர்ந்து பிரார்த்தித்தோம். இது மிகவும் மகிழ்ச்சிகரமான வெற்றி.

நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டோம்

நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டோம்

இந்த வெற்றி பெரும் சந்தோஷத்தையும், நிம்மதியையும் அளித்துள்ளது. நீண்ட காலத்திற்கு இதை நினைத்து நினைத்து பெருமை கொள்வோம்.

அபாரமான சாமுவேல்ஸ்

அபாரமான சாமுவேல்ஸ்

கடந்த முறை நாங்கள் டி20 கோப்பையை வென்றபோதும் சாமுவேல்ஸ்தான் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இப்போதும் அவரே முக்கியக் காரணமாக அமைந்தார். பிராத்வெயிட் எங்களது உள்ளங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.

எல்லோரும் பிரமாதப்படுத்தினர்

எல்லோரும் பிரமாதப்படுத்தினர்

எங்களது அணியில் இடம் பெற்ற அனைவருக்கும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூற முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் பிரமாதப்படுத்தி விட்டனர் குறிப்பாக கார்லஸ் பிராத்வெயிட் தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியில் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது.

கரீபிய மக்களுக்கு சமர்ப்பணம்

கரீபிய மக்களுக்கு சமர்ப்பணம்

இது கரீபிய மக்களுக்கு சமர்ப்பணம். எங்களது திறமையின் ஆழத்தைக் காட்டி விட்டோம். தொடர்ந்து சாதிப்போம் என்ற நம்பிககை எனக்கு உண்டு.

எத்தனை கிண்டல்கள்

எத்தனை கிண்டல்கள்

நாங்கள் எப்படி கோப்பையை வெல்லப் போகிறோம் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்தது. எங்களது மக்களுக்குமே கூட சந்தேகம் இருந்தது. மார்க் நிக்கோலஸ் (டிவி விமர்சகர்) எங்களை மூளை இல்லாத கும்பல் என்று விமர்சித்தார். வாரியத்துடன் மோதல் இருந்தது. அதைத் தாண்டி சாதித்துள்ளோம்.

15 பேரும் ஒருங்கிணைந்து

15 பேரும் ஒருங்கிணைந்து

15 பேரும் ஒருங்கிணைந்தோம். எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒரு குடும்பமாக ஆடினோம். அருமையான ரசிகர்கள் இ்ந்தியாவில் எங்களுக்குக் கிடைத்தனர். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பில் சிம்மன்ஸுக்கு நன்றி

பில் சிம்மன்ஸுக்கு நன்றி

எங்களது பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு நன்றி சொல்கிறோம் (இவர், இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக ஆடிய லென்டில் சிம்மன்ஸின் மாமா ஆவார்). ஒட்டுமொத்த அணியும் பிரமாதமாக ஆடியது. அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். கரீபிய ரசிகர்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.

மறுபடியும் விளையாடுவேனா என்று தெரியாது

மறுபடியும் விளையாடுவேனா என்று தெரியாது

நான் மறுபடியும் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடுவேனா என்று தெரியாது. எனவே இப்போதே எனது அணிக்கும், எனது சகாக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார் சமி நெகிழ்ச்சியுடன்.

Story first published: Monday, April 4, 2016, 11:54 [IST]
Other articles published on Apr 4, 2016
English summary
West Indies captain Darren Sammy turned emotional when he was speaking to the press after the historic win against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X