For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.. நியூசிலாந்து போராட்டம் வீண்

துபாய்: இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இதுவே முதல்முறையாகும்

T20 World cup 2021 final NZ vs Aus live match news updates and highlights

Nov 14, 2021, 10:54 pm IST

டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெற்றிக்குத் தேவையான 173 ரன்களை 18.5 ஓவர்களில் எடுத்தது அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 77 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இதுவே முதல்முறையாகும்

Nov 14, 2021, 10:42 pm IST

16 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 10:25 pm IST

13 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 10:05 pm IST

10 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 9:41 pm IST

3 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது. போல்ட் வீசிய 3ஆவது ஓவரில் கேப்டன் ஃபின்ச் 5 ரன்களில் வெளியேறினார்,

Nov 14, 2021, 9:32 pm IST

ஆஸ்திரேலியா அணிக்காக வார்னர் மற்றும் ஃபின்ச் களமிறங்கியுள்ளனர். போல்ட் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா

Nov 14, 2021, 9:20 pm IST

20 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் 8 ரன்களுடனும் ஜேம்ஸ் நீஷம் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

Nov 14, 2021, 9:03 pm IST

18ஆவது ஓவரில் நியூசிலாந்திற்கு இரட்டை செக் வைத்த ஹேசில்வுட். ஒரே ஓவரில் க்ளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன் அவுட் ஆகினர். 18 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 8:53 pm IST

16 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 8:36 pm IST

14 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 8:29 pm IST

12 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 8:14 pm IST

10 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 14, 2021, 8:07 pm IST

8 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. மார்ட்டின் கப்டில் 22 ரன்களுடனும் கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Nov 14, 2021, 8:00 pm IST

6 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. மார்ட்டின் கப்டில் 17 ரன்களுடனும் கேன் வில்லியம்சன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Nov 14, 2021, 7:52 pm IST

4 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. ஹேசில்வுட் வீசிய 4ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் வீக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டேரில் மிட்செல். தற்போது மார்ட்டின் கப்டில் 16 ரன்களுடனும் கேன் வில்லியம்சன் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்

Nov 14, 2021, 7:38 pm IST

முதல் ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக 2ஆவது ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசுகிறார்

Nov 14, 2021, 7:38 pm IST

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் களமிறங்கியுள்ளனர் ஆஸ்திரேலிய அணியில் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசுகிறார்

Nov 14, 2021, 7:19 pm IST

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு ஆஸ்திரேலியா பிளேயிங் 11இல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக டிம் சிஃபெர்ட் சேர்ப்பு

Story first published: Sunday, November 14, 2021, 23:05 [IST]
Other articles published on Nov 14, 2021
English summary
T20 World cup 2021 final live score updates. T20 World cup 2021 final latest updates in tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X