For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசுர கம்பேக் கொடுத்த வங்கதேசம்..பரிதாபமான பாப்புவா அணி.. சூப்பர் 12 சுற்றுக்குள் கெத்தாக நுழைந்தது!

அமீரகம்: தடுமாற்றத்தை தந்து வந்த வந்த வங்கதேசம் அணி, பாப்புவா நியூ கினியா அணியை ஆக்ரோஷமாக வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது

டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்றுப்போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்த வங்கதேசம் ஓமனிடம் தடுமாறி வென்றது.

இந்நிலையில் இன்று பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தினால் மட்டுமே சூப்பர் 12 வாய்ப்பு என்ற கட்டாயத்தில் வங்கதேசம் எதிர்கொண்டது.

'அவர குறைச்சி எடை போடாதிங்க’.. இந்திய வீரரை டார்கெட் செய்த பாகிஸ்தான் கோச்.. ஸ்பெஷல் ஸ்கெட்ச் ரெடி? 'அவர குறைச்சி எடை போடாதிங்க’.. இந்திய வீரரை டார்கெட் செய்த பாகிஸ்தான் கோச்.. ஸ்பெஷல் ஸ்கெட்ச் ரெடி?

மிக முக்கிய போட்டி

மிக முக்கிய போட்டி

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து விளையாடிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் முகமது நைம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இணைந்து சீரான இடைவெளியில் ரன்களை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சகிப் அல் ஹசன் 46 ரன்களுக்கு வெளியேறினார்.

கடின இலக்கு

கடின இலக்கு

பின்னர் வந்த முஷ்ஃபிகுர் ரஹீம் 5 ரன்னில் வெளியேற வங்கதேசம் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 5வது வீரராக களமிறங்கிய கேப்டன் முகமதுல்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்துகளை சந்தித்த அவர் அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை மலமலவென உயர்த்தினார். இதனால் 20 ஓவர்களில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

அசால்டாக வெற்றி

அசால்டாக வெற்றி

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாப்புவா நியூ கினியா அணி டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. சகிப் அல்சனின் சுழலில் சிக்கி அந்த அணி சிட்டுக்கட்டாக சரிந்தது. முதல் 7 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. இதனால் 29 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து மிக மோசமான நிலையில் பாப்புவா நியூ கினியா இருந்தது. பின்னர் வந்த கிப்லின் டோரிகா மட்டும் 46 ரன்கள் எடுக்க அந்த அணி 97 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

யாருடன் மோதல்

யாருடன் மோதல்

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி அதிகாரப்பூர்வமாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் ஏற்கனவே ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தனது 3வது போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முடிவை பொறுத்தே வங்கதேசம் குரூப் ஏ பிரிவுக்கு செல்லுமா அல்லது குரூப் பி பிரிவில் இடம்பிடிக்குமா என்பது தெரியவரும்.

Story first published: Thursday, October 21, 2021, 22:37 [IST]
Other articles published on Oct 21, 2021
English summary
Bangladesh beat Papua New Guinea and make it to Super 12 in T20 World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X