டி20 வேர்ல்ட் கப் ஸ்காட்லாந்துடன் அதிர்ச்சி தோல்வி.. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுமா வங்காளதேசம்?

துபாய்: சர்வதேச டி20 உலககோப்பையில் முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது.ஒமனில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் வங்காள தேசம் அணி ஸ்காட்லாந்து அணியிடம் 6 ரன்கள் வித்தியாத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

T20 World Cup : Bangladesh-க்கு அதிர்ச்சி கொடுத்த Scotland.. அசத்தல் வெற்றி

உலககோப்பை அரங்கில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை சாய்த்த வங்காள தேசம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

டி20 உலககோப்பை.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை ரத்து செய்யணும்.. மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து! டி20 உலககோப்பை.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை ரத்து செய்யணும்.. மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து!

ஸ்காட்லாந்து அட்டகாசம்

ஸ்காட்லாந்து அட்டகாசம்

டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதற்கு ஏற்றபடி வங்காளதேச பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். 11 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்காட்லாந்து பரிதவித்தது. ஆனால் கிறிஸ் கிரேவ்ஸ் அணியை தூக்கி நிறுத்தினார். அவர் 28 பந்துகளில் 45 ரன்கள் சேர்க்க, ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

சிக்கலில் வங்காளதேசம்

சிக்கலில் வங்காளதேசம்

இலக்கை நோக்கி ஆடிய வங்காள தேசம் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முஸ்தபிர் ரஹீம், ஷகீப் அல் ஹஸன் சிறப்பாக ஆடினாலும், அதன்பின்னர் விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வி பெற்றதால் வங்காள தேச அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

பேட்டிங் கவலை அளிக்கிறது

பேட்டிங் கவலை அளிக்கிறது

இந்த ஆட்டம் முடிந்த பிறகு பேசிய வங்காள தேசம் கேப்டன் மஹ்முதுல்லா, ''எங்கள் பேட்டிங் கவலை அளிக்கிறது. நான் மிகவும் விரக்தியடைந்தேன். நாங்கள் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எங்களிடம் ஆழமான பேட்டிங் வரிசை உள்ளது.

திருப்புமுனை இதுதான்

திருப்புமுனை இதுதான்

முஷ்பிகுர் ரஹீம் அவுட்டானது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒரு நல்ல டி 20 அணி. எங்களிடம் திறன் உள்ளது. எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும்போது, ​​நாம் ஆட்டங்களை வெல்ல முடியும். பவர்பிளேவில் ரன்கள் எடுக்க முடியவில்லை. இலக்கை துரத்தும்போது பவர்பிளேவில் ரன்கள் அடிப்பது முக்கியம் என்று மஹ்முதுல்லா கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
In the first round match of the T20 World Cup, Bangladesh lost to Scotland by 6 runs. Our batting is worrying," said Bangladesh captain Mahmudullah
Story first published: Monday, October 18, 2021, 17:39 [IST]
Other articles published on Oct 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X