For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு ட்விஸ்டா.. ஹர்திக் விவகாரத்தில் ஐசிசி கொடுத்த சர்ஃபரைஸ்.. ரோகித் வாக்கு பலித்துவிட்டது!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெரும் விவகாரத்தில் பிசிசிஐ-க்கு புதிய சர்ஃபரைஸ் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது.

T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை! T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை!

குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள்
ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடி வருகிறார்கள் என்ற பார்வை இருந்து வருகிறது.

பிசிசிஐ-க்கு நிம்மதி

பிசிசிஐ-க்கு நிம்மதி

ஆட்டத்தின் தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் மோசமாக சொதப்பி வந்தனர். இதில் அனைவருமே ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடி கம்பேக் கொடுத்ததால் பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

ஹர்திக் நீக்கம்?

ஹர்திக் நீக்கம்?

ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. பேட்டிங்கை போன்று பந்துவீச்சிலும் உதவுவார் என்ற காரணத்தினால் தான் அவர் அணிக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால் ஐபிஎல்-ல் அவர் ஒரு பந்துகூட வீசவில்லை. பேட்டிங்கிலும் கடைசி வரை தனது திறமையை அவர் நிரூபிக்கவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோரில் யாரையாவது ஒருவரை மெயின் அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

 இன்றே கடைசி நாள்

இன்றே கடைசி நாள்

ஹர்திக் பாண்ட்யாவை நீக்குவது குறித்து முடிவெடுக்க இன்றே கடைசி நாளாகும். ஏனென்றால் டி20 உலகக்கோப்பைக்காக இறுதி செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலை ஐசிசியிடம் ஒப்படைக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனால் என்னென்ன மாற்றங்கள் அணியில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஐசிசி கொடுத்த ட்விஸ்ட்

ஐசிசி கொடுத்த ட்விஸ்ட்

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் இறுதி செய்யப்பட்ட பட்டியலை ஒப்படைக்க அக்டோபர் 15ம் தேதி வரை கால அவகாசம் கிடைத்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தகுதிச்சுற்று பிரிவுகளில் இடம்பெற்றுள்ள அணி தான் அக்டோபர் 10ம் தேதி பட்டியலை சமர்பிக்க வேண்டும். சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தேர்வான அணிகள், போட்டி தொடங்குவதற்கு 7 நாட்கள் முன்பு சமர்பித்தால் போதும். அதன்படி சூப்பர் 12 போட்டிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி தான் தொடங்குகிறது. எனவே அக்டோபர் 15ம் தேதி இந்திய அணி இறுதிப்பட்டியலை சமர்பித்தால் போதுமானது.

ஹர்திக் விவகாரம்

ஹர்திக் விவகாரம்

இந்த கால அவகாசம் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரும் சர்ஃபரைஸ் என்றே கூறலாம். ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சு திறணை பார்ப்பதற்கு இன்னும் 5 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்திய அணி துணைக்கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் முன்னேற்றம் கண்டு வருகிறார். இன்னும் ஒருவாரத்தில் பந்துவீசுவார் என தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் பவுலிங்கை கண்ட பிறகு அணியில் எடுக்கலாமா, வேண்டாமா என பிசிசிஐ முடிவெடுக்க உள்ளது.

Story first published: Monday, October 11, 2021, 7:23 [IST]
Other articles published on Oct 11, 2021
English summary
BCCI gets a Extra 5 days time for the submission of final squad to ICC for T20 World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X