“இதை முதலில் செய்யுங்கள்.. வெற்றி தானாக வரும்”.. கோலிக்கு கவாஸ்கர் கூறிய முக்கிய யோசனை..நடக்குமா?

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டு வரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

விமர்சனம்

விமர்சனம்

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியதால் தற்போது பல்வேறு விமர்சனங்களை சமூக வலைதளம் வாயிலாக சந்தித்து வருகிறது. மேலும் இந்திய அணியில் முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்களும் விமர்சனங்களில் சிக்கியுள்ளனர்.

கம்பேக் தேவை

கம்பேக் தேவை

இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணிக்கு அடுத்து உள்ள 4 போட்டிகளில் நியூசிலாந்து மட்டுமே பெரிய அணி. எனவே அந்த அணியை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். இதனால் இந்திய அணி பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

அடுத்து என்ன செய்ய வேண்டும்

அடுத்து என்ன செய்ய வேண்டும்

இந்நிலையில் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான அட்வைஸை முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை முதலில் மறக்க வேண்டும். அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகமாக யோசிக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் உலக கோப்பை தொடரின் அடுத்தடுத்த போட்டிகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும்.

கவாஸ்கர் நம்பிக்கை

கவாஸ்கர் நம்பிக்கை

இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்து அடுத்தடுத்த போட்டிக்கு தயாராவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் எதிர்வரும் போட்டிகளை கைப்பற்றும் அளவிற்கு பலம் இந்திய அணியில் உள்ளதால் தற்போது வெற்றிக்கான யுக்தியை மட்டுமே யோசிக்க வேண்டும். இது தொடரின் ஆரம்பம் தான் முடிவு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 31ம் தேதியன்று நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. அமீரக களத்தில் நியூசிலாந்து அணிக்கும் நல்ல அனுபவம் உள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Gavaskar gives idea to Virat Kohli after India's crushing defeat to Pakistan inT20 World Cup
Story first published: Tuesday, October 26, 2021, 19:24 [IST]
Other articles published on Oct 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X