For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“வெறும் 15 நிமிடம் தான்” அனைத்தையும் மாற்றிய தோனி.. ஃபுல் ஃபார்மில் பாண்ட்யா பவுலிங் செய்தது எப்படி

அமீரகம்: ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் ஃபுல் ஃபார்மில் பவுலிங் போட வைத்துள்ளார் ஆலோசகர் எம்.எஸ்.தோனி.

தினேஷ் கார்த்திக் - தீபிகா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்.. அழகான பெயர்கள் சூடல்.. வைரலாகும் புகைப்படம்!தினேஷ் கார்த்திக் - தீபிகா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்.. அழகான பெயர்கள் சூடல்.. வைரலாகும் புகைப்படம்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி இரவு நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இந்தியாவுக்கு இன்னும் 4 லீக் போட்டிகள் இருக்கும் போதிலும், நியூசிலாந்துடனான போட்டி வாழ்வா? சாவா? ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு சிக்கல்

இந்தியாவுக்கு சிக்கல்

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து இருக்கும் பெரிய அணியான நியூசிலாந்தை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த முடியும். இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக அணிக்கு 6வதாக ஒரு பவுலர் நிச்சயம் தேவை என்ற சூழல் உள்ளது.

ஹர்திக்

ஹர்திக்

இந்த இக்கட்டான சூழலில் தற்போது அனைவரின் கவனமும் ஹர்திக் பாண்ட்யா மீது திரும்பியுள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியின் போது பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டார். நியூசிலாந்துடனான போட்டியில் விளையாடுவாரா என்ற குழப்பம் நீடித்தது.

கம்பேக் கொடுக்கும் பாண்ட்யா

கம்பேக் கொடுக்கும் பாண்ட்யா

இந்நிலையில் நிச்சயம் ப்ளேயிங் 11 இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. காயத்தில் இருந்து பூரண குணமடைந்துள்ள பாண்ட்யா, நேற்று பவுலிங் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். வலைப்பயிற்சியின் போது சுமார் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா பவுலிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதில் அவரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளதாகவும் அணி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நியூசிலாந்துக்கு எதிராக அவரின் பவுலிங் கண்டிப்பாக இருக்கும்.

மறைந்திருக்கும் உண்மை

மறைந்திருக்கும் உண்மை

ஹர்திக் கம்பேக் கொடுப்பதற்கு தோனி மறைமுக காரணமாக இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக பந்துவீச்சில் பெரிதாக ஈடுபடாமல் உள்ள பாண்ட்யா, நேற்று திடீரென வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவரின் செயல்பாடுகளை ஆலோசகர் எம்.எஸ்.தோனி அருகில் இருந்து கண்காணித்துள்ளார். மேலும் தவறுகளையும் சரிசெய்ய அறிவுரை கூறியுள்ளார். தோனி தான் அவரை கட்டாயப்படுத்தி பவுலிங் போட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முடிந்த பிறகு தோனியை கட்டிப்பிடித்து ஹர்திக் நன்றி கூறியுள்ளார். 2 வருடமாக ஃபார்மில் இல்லாத பாண்ட்யாவை மீண்டும் பவுலிங் போட உத்வேகமாக இருந்துள்ளார் தோனி. இதுகுறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Hardik Pandya-வை எடுத்தது பெரிய தப்பு.. India தோல்வியை மறக்க வேண்டும் - Coach Harrington
தோனியின் அறிவுரை

தோனியின் அறிவுரை

சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கலக்கியதற்கு அடித்தளம் போட்டவர் தோனி என்று கூறலாம். பாண்ட்யாவின் ஆரம்ப காலக்கட்டத்தில் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து எப்படி பந்துவீச வேண்டும், முக்கியமான நேரத்தில் விக்கெட் எப்பட் எடுப்பது என்பதை தோனிதான் அவருக்கு கூறியிருந்துள்ளார். வங்கதேசத்தை கடைசி ஒரு ரன்னில் இந்தியா வீழ்த்தியதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

Story first published: Friday, October 29, 2021, 13:53 [IST]
Other articles published on Oct 29, 2021
English summary
Hardik Pandya gives comeback in bowling, Hugging MS Dhoni After Nets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X