For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி 20 உலகக் கோப்பை: சிறந்த வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்த ஐசிசி - இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தி!

துபாய்: ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐ.சி.சி. டி-20 உலகக் கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

 'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்? 'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்?

கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் வெளியேறியது.

கேப்டன் பாபர்

கேப்டன் பாபர்

இந்த நிலையில் டி-20 உலகக் கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட அணியை ஐ.சி.சி.அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ஜாஸ் பட்லர்(இங்கிலாந்து) தேர்வாகியுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசையில் அசலங்கா (இலங்கை), மார்க்ரம்( தென்னாப்பிரிக்கா), மொயின் அலி( இங்கிலாந்து), ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சுழற்பந்துவீச்சாளராக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய இலங்கை வீரர் ஹசரங்கா, ஆடம் சாம்பா( ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்களாக ஹேசல்வுட்(ஆஸ்திரேலியா), பெளல்ட்(நியூசிலாந்து), நோக்கியா(தென்னாப்பிரிக்கா) ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 12வது வீரராக ஷாயின் ஷா அஃப்ரிடி இடம்பெற்றுள்ளார். ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய ரபாடாவுக்கும் அணியில் இடமில்லை

 இந்தியாவுக்கு ஏமாற்றம்

இந்தியாவுக்கு ஏமாற்றம்

சிறந்த வீரர்கள் அடங்கிய ஐ.சி.சி. அணியில் இந்திய வீரர்களின் ஒருவர் பெயர் கூட இல்லை. இரு முறை தொடர் நாயகன் விருதை வென்ற கோலி, அதிரடி வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இம்முறை அணியில் இடம்பெறவில்லை. மற்ற அணி வீரர்களை காட்டிலும் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை என்பதையே இது காட்டுகிறது

Recommended Video

Australiaவின் World Cup Victory! Just Langer coachingஆல் Good News | OneIndia Tamil
சிறந்த அணி

சிறந்த அணி

ஐ.சி.சி. சிறந்த அணியில் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிலிருந்து மூவரும், இங்கிலாந்து வீரர்கள் இருவரும், பாகிஸ்தான் வீரர்கள் இருவரும், இலங்கை வீரர்கள் இருவரும், தென்னாப்பிரிக்க வீரர்கள் இருவரும், நியூசிலாந்து வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தியா, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து எந்த வீரர்களும் சிறந்த அணியில் தேர்வாகவில்லை.

Story first published: Monday, November 15, 2021, 19:03 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
ICC Picks best players of the t20 worldcup tournament: No Indian got place in the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X