For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்பப் போய் அதெல்லாம்.. சான்ஸே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாங்க

மெல்போர்ன்: கொரோனாவைரஸ் உச்சத்தில் இருக்கும் நிலையில் டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்து இயலாத காரியம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

16 அணிகளை இங்கு கொண்டு வர வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நோய்த் தொற்று வராமல் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமே இல்லை என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் இயர்ல் எட்டிங்ஸ் கூறியுள்ளார்.

அக்டோபர் நவம்பரில் இப்போட்டித் தொடர் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே உள்ளன. காரணம் ஆஸ்திரேலியாவில் இன்னும் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி கிடையாது. பல கட்டுப்பாடுகளும் உள்ளன. ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே போட்டித் தொடரை நடத்துவது சிக்கலாகியுள்ளது.

ரைட்டு.. நீங்க இங்கிலாந்துக்குப் போகலாம்.. பெர்மிஷன் கொடுத்தார் இம்ரான் கான்ரைட்டு.. நீங்க இங்கிலாந்துக்குப் போகலாம்.. பெர்மிஷன் கொடுத்தார் இம்ரான் கான்

இயர்ல் கருத்து இதுதான்

இயர்ல் கருத்து இதுதான்

இந்த நிலையில் இதுகுறித்து இயர்ல் கூறுகையில், போட்டித் தொடரை நடத்துவது தற்போதைய சூழலில் நடக்க முடியாத விஷயமாகும். மிக மிக கடினம். நிச்சயம் வாய்ப்பில்லை. 16 அணிகளை கொண்டு வந்து வைத்து போட்டியை நடத்துவது சுலபமல்ல. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து மீளவில்லை இன்னும். பாதிப்பும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. நின்றபாடில்லை என்றார் அவர்.

ஐசிசி முடிவு

ஐசிசி முடிவு

கடந்த வாரம் ஐசிசி இந்த விவகாரம் குறித்து விவாதித்தது. அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என அப்போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இயர்ல் சொல்வதைப் பார்த்தால் போட்டித் தொடர் சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்த போட்டித் தொடர் தொடர்பாக அடுத்த மாதம் கூடி சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐபிஎல்லுக்கு வாய்ப்பு

ஐபிஎல்லுக்கு வாய்ப்பு

ஆனால் தற்போதைய நிலவரப்படி போட்டித் தொடர் தள்ளிப் போடப்படலாம். அந்த இடத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது ஐபிஎல் போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறாவிட்டால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். இங்கு கிட்டத்தட்ட 7000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6000 பேருக்கு மேல் டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். இங்கு தற்போது கொரோனா மட்டுப்பட்டுள்ளது. என்றாலும் கூட ஆஸ்திரேலியா அரசு மிக மிக கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 16, 2020, 15:16 [IST]
Other articles published on Jun 16, 2020
English summary
CA chairman has said that T20 World Cup is doubtful at this situation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X