For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா-பாக். போட்டியை பார்த்தால் ஹார்ட்-அட்டாக் வருமாம்.. டிவிகளை அகற்றிய பாக். மருத்துவமனைகள்

By Veera Kumar

இஸ்லாமாபாத்: உலக கோப்பை டி20 தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்றதற்காக, அந்த அணி கேப்டன் ஷாகித் அப்ரிடியை வறுத்து வருகிறார்கள் பாக். அணியின் முன்னாள் பிரபல வீரர்கள். இதய நோய் பாதிப்பு வந்துவிட கூடாது என்பதற்காக, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த டிவிகள் அகற்றப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய சூப்பர்-10 போட்டி கடந்த சனிக்கிழமை, கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டி இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களையும் பெரிதும் எதிர்பார்க்க வைத்திருந்தது. பல நகரங்களிலும், தெருக்களில் எல்சிடி டிவிகளை பொருத்தி பாகி்ஸ்தான் ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு ரசித்தனர்.

ரகளை

இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தானை மண்ணை கவ்வ செய்தது. இதையடுத்து பாகிஸ்தானின் பல நகரங்களிலும் டிவி பெட்டிகளை போட்டு உடைத்து ரசிகர்கள் ரகளை செய்தனர்.

வெற்றி, தோல்வி மாரடைப்பு

வெற்றி, தோல்வி மாரடைப்பு

சில உணர்வுப் பூர்மான போட்டிகளை பாரக்கும்போது, தோல்வியோ அல்லது வெற்றியோ, எந்த ஒரு அதிர்ச்சியையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மாரடைப்பால் ரசிகர்கள் உயிரிழந்துள்ள சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துள்ளன.

கொடுமை

கொடுமை

பாகிஸ்தான் ரசிகர்கள் எப்போதுமே உணர்ச்சிகரமானவர்களாகவே உள்ளனர். அதிலும் இதய நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.. எனவே, இந்த போட்டி காரணமாக, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சிய பாகிஸ்தான் அரசு, இதய நோய் மருத்துவமனையில் இருந்த டிவி பெட்டிகளை அகற்றியுள்ளது.

டைம்பாஸ் போச்சே

டைம்பாஸ் போச்சே

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரிலுள்ள அரசு மற்றும் தனியார் இதய நோய் சிகிச்சை மருத்துவமனைகளில் நோயாளிகள் பொழுதுபோக்க பொருத்தப்பட்டிருந்த டிவி பெட்டிகள் சனிக்கிழமை அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

இதுக்கெல்லாமா

இதுக்கெல்லாமா

போட்டியை பார்த்துவிட்டு இதய நோயாளிகள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்பதே இந்த ஏற்பாட்டுக்கு காரணம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடப்பாவிகளா.. இதுக்கெல்லாமா உணர்ச்சி வசப்படுவீங்க? இன்னும் நீங்க பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கே பங்காளி.

Story first published: Monday, March 21, 2016, 14:36 [IST]
Other articles published on Mar 21, 2016
English summary
Fearing for patients under treatment for cardiac ailments, the civil administration in the Pakistani city of Gujranwala had all TV sets removed from their wards in government and private hospitals before the Indo-Pak World T20 match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X