For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெரும் விவகாரத்தில் பிசிசிஐ-க்கு புதிய சர்ஃபரைஸ் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது.

குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள்
ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடி வருகிறார்கள் என்ற பார்வை இருந்து வருகிறது.

“கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா” டி20 உலகக்கோப்பைகாக 2 புதிய வசதிகள்.. கொண்டாட்டத்தில் குதிக்கும் அணிகள்“கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா” டி20 உலகக்கோப்பைகாக 2 புதிய வசதிகள்.. கொண்டாட்டத்தில் குதிக்கும் அணிகள்

பிசிசிஐ-க்கு நிம்மதி

பிசிசிஐ-க்கு நிம்மதி

ஆட்டத்தின் தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் மோசமாக சொதப்பி வந்தனர். இதில் அனைவருமே ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடி கம்பேக் கொடுத்ததால் பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

குழப்பம்

குழப்பம்

இதற்கிடையில் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்ம் தான் இந்திய அணியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 வருடங்களாக பந்து வீசாமல் இருந்து வரும் பாண்ட்யா தற்போது பேட்டிங்கிலும் மிக மோசமாக சொதப்பி வருகிறார். உலகக்கோப்பை அணியில் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்ட பாண்டியா இந்த தொடரில் பந்து வீசுவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பந்து வீசவில்லை என்றால் மாற்று வீரர் நிச்சயமாக இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டது.

பாண்ட்யா நிலை

பாண்ட்யா நிலை

எனவே அதன்படி பாண்ட்யா, தனது உடற்தகுதியை நிரூபிக்க பிசிசிஐ அக்டோபர் 15ம் தேதி கெடு விதித்துள்ளது. ஏனென்றால் அக்டோபர் 15ம் தேதிக்குள்ளாக இறுதிசெய்யப்பட்ட இந்திய அணி பட்டியலை ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்குள்ளாக எத்தனை மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம்.

எனினும் அதற்குள் அவர் பந்து வீச தயாராகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்

மாற்று வீரர்

பரிசோதனையின் முடிவில் பாண்ட்யா இடம் பெறுவாரா ? இல்லையா ? என்பது தீர்மானிக்கப்படும். ஒருவேளை பாண்டியா பந்துவீசும் அளவிற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றால் நிச்சயம் மாற்றுவீரர் அணிக்கு அழைக்கப்படுவார். அதன்படி பாண்டியாவுக்கு பதிலாக 3 இளம் வீரர்களில் ஒருவரை பேக் அப் வீரராக தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 3 வீரர்கள்

அந்த 3 வீரர்கள்

வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல், ஷிவம் மாவி ஆகிய மூவரிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் அறிவிப்பு வெளியாகும் வரை அந்த மூவரும் நாடு திரும்பக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் வெங்கடேஷ் ஐயர் தான் மாற்று வீரராக அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, October 12, 2021, 19:50 [IST]
Other articles published on Oct 12, 2021
English summary
BCCI approached 3 young players for the back up of Hardik pandya in T20 WorldCup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X