For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷர்துலுக்கு அதிகரித்த டிமேண்ட்.. கலக்கத்தில் இருக்கும் சீனியர் பவுலர்.. சங்கடமான சூழலில் கோலி!

அமீரகம்: டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended Video

Practice Match-ல் ஏற்பட்ட குழப்பம்.. Shardul Thakur-க்கு வாய்ப்பு கிடைக்குமா ?

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் அக்.23ம் தேதியன்று தான் தொடங்குகிறது.

இதனால் இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகள் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் நேற்று இந்திய அணி, இங்கிலாந்துடன் போட்டி போட்டு வென்றது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 51 (24), இஷான் கிஷன் 70 (46) ஆகியோர் அதிரடி காட்டினர். பயிற்சி போட்டிகளை வைத்துதான் இந்திய அணி ப்ளேயிங் 11 தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் பயிற்சி போட்டியில் தான் புதிய குழப்பமே ஏற்பட்டுள்ளது.

பவுலிங் சொதப்பல்

பவுலிங் சொதப்பல்

நேற்றைய போட்டியில் பேட்டிங் சிறப்பாக இருந்த போதும், பவுலிங் சொதப்பியது. குறிப்பாக புவனேஷ்வர்குமாரின் ஃபார்ம் கவலையளிக்கிறது. 4 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் மொத்தமாக 54 ரன்களை வாரி வழங்கினார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட அவர் எடுத்துக் கொடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் அவர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே போல மற்றொரு சீனியர் வீரரான முகமது ஷமி 4 ஓவர்களில் 3 விக்கெட்களை எடுத்தார். எனினும் அவரின் ஓவர்களில் 40 ரன்களை பறந்தன.

குழப்பம்

குழப்பம்

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் இருந்து புவனேஷ்வர் குமார் நீக்கப்பட வேண்டும் என ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்க்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர். ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் மிகவும் இக்கட்டான சூழல்களில் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுத்து அசத்தினார். இதே போல பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர் தான்.

 ஷர்துலிடம் உள்ள சிக்கல்

ஷர்துலிடம் உள்ள சிக்கல்

இது ஒருபுறம் இருந்தாலும், ஷர்துல் தாக்கூரின் எகானமி ரேட் அதிகமாகும். அவர் எந்த அளவிற்கு முக்கிய விக்கெட்களை எடுத்தாலும், ரன்களை வாரி வழங்கிவிடுகிறார். இது பின்னடவை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் கேப்டன் கோலியிடம் இருந்து வருகிறது. இதுவே புவனேஷ்வர் குமார் என்றால், அதிக அனுபவம் உடையவர், முதல் சில ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் இறுதியில் கட்டுப்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தோனியின் தனிப்பட்ட ஆலோசனைக்கு பிறகு ஷர்துல் விளையாடினால், சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, October 19, 2021, 22:03 [IST]
Other articles published on Oct 19, 2021
English summary
Bhuvneshwar Kumar vs Shardul Thankur, huge fight for bowling spot in India's playing 11? in T20 WorldCup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X