நியூசி, போட்டியில் ஆடுவாரா ஹர்திக்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது.. ரசிகர்கள் அதிருப்தி!

நியூசி, போட்டியில் ஆடுவாரா ஹர்திக்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது.. ரசிகர்கள் அதிருப்தி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Hardik Pandya.. அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

அமீரகம்: காயத்தினால் பாதிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.

இந்தியாவின் வெற்றி அவ்வளவு எளிதல்ல பாகிஸ்தான் அணியின் அசைக்க முடியாத 4 வீரர்கள்..பலம், பலவீனம் என்ன?இந்தியாவின் வெற்றி அவ்வளவு எளிதல்ல பாகிஸ்தான் அணியின் அசைக்க முடியாத 4 வீரர்கள்..பலம், பலவீனம் என்ன?

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங்கில் 151 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

ஹர்திக்கிற்கு காரணம்

ஹர்திக்கிற்கு காரணம்

இந்த போட்டியின் போது இந்திய அணிக்கு தோல்வியுடன் சேர்த்து பெரும் பின்னடைவும் வந்துள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, பவுண்டரிகளை தொடர்ந்து அடித்து வந்தார். ஆனால் திடீரென பவுன்சர் பந்து ஒன்று அவரின் தோள்பட்டையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. இதனால் வலித்தாங்க முடியாமல் தவித்த பாண்ட்யாவை உடனடியாக ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

இது ஒருபுறம் இருக்க இந்திய அணிக்கு அடுத்ததாக மிக முக்கிய போட்டி உள்ளது. வரும் அக்டோபர் 31ம் தேதியன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பு என்பது பிரகாசமாகும். எனவே இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்குவாரா, அல்லது அவரின் காயத்தினால் வெளியேற்றப்படுவாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

உடல்நிலை என்ன?

உடல்நிலை என்ன?

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்நிலை மற்றும் அவர் அடுத்த போட்டியில் இருப்பாரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹர்திக் பாண்ட்யா தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். முன்னெச்சரிக்கை காரணமாக தான் ஸ்கேன் செய்யப்பட்டது. அவர் அடுத்தப்போட்டிக்கான தேர்வின் போது நிச்சயம் இடம்பெறுவார். நியூசிலாந்து அணியுடன் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஹர்திக் பாண்ட்யா அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று வெளியான தகவல் சில ரசிகர்களுக்கு சோகத்தையும் கொடுத்துள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யா தற்போது முழு நேர பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட்டால் பேட்டிங்கிலும் சிறப்பாக இருப்பார், 6வது பந்துவீச்சாளர்களாகவும் இருப்பார் என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik pandya's health update is Out, will he comeback in newzealand match in T20 Worldcup
Story first published: Tuesday, October 26, 2021, 17:25 [IST]
Other articles published on Oct 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X