For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்னையே ஏமாத்திட்டல்ல”.. இந்திய அணியில் திசைமாறிய சண்டை.. அடித்துக்கொள்ளும் ரோகித் - இஷான் கிஷான்!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் புதிய குழப்பமாய் 2 இடங்களுக்கு 3 முக்கிய வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர்.

Recommended Video

How Indian Cricket Team Succeeded in T20 World Cup | OneIndia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி மிகத்தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் போட்டியாக வரும் அக்டோபர் 24ம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதற்கான வீரர்களை தேர்வு செய்ய இந்திய அணி தற்போது பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுள்ளது. நேற்று இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோரின் அதிரடியால் கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், யாருக்கு இடம் கொடுப்பது என்ற சிக்கல் எழுந்துள்ளது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

சீனியர் வீரர் ரோகித் சர்மாவுக்கு நேற்று ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் 189 என்ற கடின இலக்கை துரத்த இஷான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இருவருமே மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டனர். 24 பந்துகளை சந்தித்த ராகுல் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 51 ரன்களை குவித்தார். இதே போல 46 பந்துகளை சந்தித்த இஷான் கிஷான் 70 ரன்களை விளாசி ரிட்டைர்ட் அவுட்டானார். இவர்களில் அசத்தல் ஆட்டத்தினால் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டிற்கு 82 ரன்கள் சேர்த்தது.

 சொற்ப ரன்னுக்கு அவுட்

சொற்ப ரன்னுக்கு அவுட்

2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவுக்கு பெரிதாக ஸ்ட்ரைக் ரேட் கிடைக்கவில்லை. கடைசி சில ஓவர்களில் தான் வாய்ப்பு கிடைத்ததால், தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தார். 9 பந்துகளில் 8 ரன்களை அவர் சேர்த்தார். எனினும் சரியான ஸ்ட்ரைக் கிடைக்காததே அவர் பெரிய ஸ்கோர் அடிக்காததற்கு காரணமானது.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

இந்நிலையில் இந்திய அணியின் 2வது விக்கெட்டிற்கு யாரை களமிறக்குவது என்ற குழப்பம் இருந்தது. ஓப்பனிங் ஜோடியாக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் களமிறங்க தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. கே.எல்.ராகுல் தனது ஃபார்மை நிரூபித்துவிட்டார். முதல் விக்கெட்டிற்கு கேப்டன் கோலி களமிறங்குவார். எனவே 2வது விக்கெட்டிற்கு தான் இஷான் அல்லது சூர்யகுமார் வரவேண்டும். ஆனால் ஓப்பனிங்கில் களமிறக்கிவிட்டால் இஷான் கிஷான் நன்றாக சூட் ஆகிறார். மிடில் ஓவர்களில் அவர் சற்று வேகம் எடுப்பதற்கு சிரமப்படுவது தெரிகிறது. எனவே அந்த இடத்தில் சூர்யகுமார் போல சற்று தரையோடு அடிப்பவர்களே சிறப்பாக இருக்கும் எனக்கூறுகின்றனர்.

திசைமாறிய சண்டை

திசைமாறிய சண்டை

இதன் காரணமாக தற்போது சண்டை ரோகித் சர்மா - இஷான் கிஷனுக்குள் முற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால் இஷான் அசுர ஃபார்மில் இருக்கிறார். எனவே கே.எல்.ராகுலுடன் இஷான் கிஷனை களமிறக்குவார்களா அல்லது கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு, ரோகித் மற்றும் இஷான் கிஷான் ஓப்பனிங் ஜோடியாக விளையாடுமா என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

Story first published: Tuesday, October 19, 2021, 16:21 [IST]
Other articles published on Oct 19, 2021
English summary
Ishan kishan and Rohit clasesh for to get opening place in team india for T20 WorldCup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X