இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் விலகல்..இனி வெற்றி உறுதியா?

அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளது.

India-க்கு எதிரான போட்டியில் Martin Guptill விளையாடுவது சந்தேகம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலைமை உள்ளதால், இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது.

ஒரே இரவில் நடந்த அதிசயம்.. இந்திய அணிக்கு 6வது பவுலர் ரெடி.. நியூசி, போட்டிக்கு பலமான ப்ளேயிங் 11! ஒரே இரவில் நடந்த அதிசயம்.. இந்திய அணிக்கு 6வது பவுலர் ரெடி.. நியூசி, போட்டிக்கு பலமான ப்ளேயிங் 11!

 வாழ்வா? சாவா? ஆட்டம்

வாழ்வா? சாவா? ஆட்டம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ‘பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த பெரிய அணியான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் நியூசிலாந்து வென்றுவிட்டால், அடுத்துள்ள நம்பியா, ஸ்காட்லாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளை சுலபமாக வீழ்த்தி 4 வெற்றிகளுடன் அரையிறுதி சென்றுவிடும். எனவே இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

இந்தியாவுக்கு ஜாக்பாட்

இந்தியாவுக்கு ஜாக்பாட்

இந்நிலையில், நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கு இந்திய அணிக்கு பெரும் அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மன் மற்றும் முக்கிய ஆல்ரவுண்ட விலகியுள்ளனர். நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் மார்டின் கப்தில். இவர் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றபோது, கால் பெருவிரலில் பெரிய காயத்தை சந்தித்தார். இதனால் அந்த போட்டியிலேயே அவரால் நீண்ட நேரம் களத்தில் இருக்க முடியவில்லை.

கோச் பதில்

கோச் பதில்

இவரது காயம் குறித்துப் பேசிய அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட், கப்திலுக்கு ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து தற்போது கூற முடியாது எனத்தெரிவித்துள்ளார். எனினும் கப்தில் இருக்கும் நிலைமையில் நிச்சயம் அவரால் பங்கேற்க முடியாது என்றே தெரிகிறது.

ஆல்ரவுண்டர் விலகல்

ஆல்ரவுண்டர் விலகல்

இதே போல அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் லாக்கி ஃபெர்க்யூசன் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார். தசைப் பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே இந்த முடிவை எடுத்துள்ளார். அவருக்கு மாற்றாக ஆடம் மில்னேவை சேர்க்க நியூசிலாந்து தயாராக இருக்கிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு ஐசிசி இன்னும் ஒப்புதல் தரவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே இவை நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாகவும், இந்திய அணிக்கு ஜாக்பாட்டாகவும் பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
New Zealand Lockie Ferguson, Martin Guptill out on India match in T20 worldcup
Story first published: Thursday, October 28, 2021, 12:12 [IST]
Other articles published on Oct 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X