For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நீங்கெல்லாம் அத பண்ணலாமா” மத ரீதியாக தாக்கப்படும் முகமது ஷமி.. இந்திய அணியை விளாசும் உமர் அப்துல்லா

அமீரகம்: பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய வீரர் முகமது ஷமியை மத ரீதியாக ரசிகர்கள் விமர்சித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Recommended Video

Shami-ஐ குறிவைக்கும் விஷமிகள்.. Indian Team தோல்விக்கு மத ரீதியான தாக்குதல்

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்திய வீரர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

கைவிட்ட முக்கிய வீரர்கள்.. 'கிங்’ கோலியின் க்ளாசிக் ஆட்டம்.. பாகிஸ்தானுக்கு சவால் இலக்கு நிர்ணயம்!கைவிட்ட முக்கிய வீரர்கள்.. 'கிங்’ கோலியின் க்ளாசிக் ஆட்டம்.. பாகிஸ்தானுக்கு சவால் இலக்கு நிர்ணயம்!

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.

 வீரர்களுக்கு பாராட்டு

வீரர்களுக்கு பாராட்டு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விடாப்பிடி போராட்டத்திற்கு பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆட்டம் முடிந்த பிறகு முகமது ரிஸ்வானை இந்திய கேப்டன் விராட் கோலி கட்டியணைத்து பாராட்டு தெரிவித்த புகைப்படம் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை காட்டியது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

மற்றொரு புறம் இந்திய அணியின் தோல்விக்கு முகமது ஷமி மீது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று ஷமி வீசிய 18 வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் சென்றது. இதனால் ஆந்த ஓவரிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வி அதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. எனினும் முகமது ஷமி இஸ்லாமியர், அதன் காரணமாக தான் பாகிஸ்தானுக்கு சுலபமாக பந்துவீசிவிட்டார் என தகாத வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றனர்.

உமர் அப்துல்லா கண்டனம்

உமர் அப்துல்லா கண்டனம்

இந்நிலையில் ஷமிக்கு ஆதரவாக இந்திய அணி ஏன் நிற்கவி்ல்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர். முகமது ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மோசமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் ட்ரால் செய்யப்படும்போது, அவருக்கு ஆதவாரக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதானத்தில் முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்தது எந்தவிதத்திலும் பொருட்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

வீரர்களின் முன்னெடுப்பு

வீரர்களின் முன்னெடுப்பு

நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர்கள் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக மண்டியிட்டு முன்னெடுப்பு ஒன்றை எடுத்தனர். ஆனால் இந்திய அணிக்குள்ளேயே ஒருவர் மத ரீதியாக தாக்கப்படும் போதும், வீரர்கள் உலக பிரச்னைக்கு கருத்து தெரிவிக்க வந்துவிட்டார்களா என ரசிகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Story first published: Monday, October 25, 2021, 17:37 [IST]
Other articles published on Oct 25, 2021
English summary
Omar Abdullah slams team India for not stand with Mohammed Shami in T20 Worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X