For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்தியாவுக்கு தொடக்கமே வெற்றி”.. முக்கிய வீரரை கழட்டிவிட்ட பாகிஸ்தான்.. 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு

அமீரகம்: இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரரை நீக்கிவிட்டால் மிகப்பெரும் பின்னடைவாக சென்றுவிடும் என முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் உள்ளது.

இரு அணிகளும் மோதும் போட்டியானது வரும் நாளை இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

“தோனியால் எந்த பயனும் இல்லை”.. டி20 உலகக்கோப்பையில் என்ன நடக்கும்.. உண்மையை புட்டு வைத்த கவாஸ்கர்! “தோனியால் எந்த பயனும் இல்லை”.. டி20 உலகக்கோப்பையில் என்ன நடக்கும்.. உண்மையை புட்டு வைத்த கவாஸ்கர்!

 இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகிறது. உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை தோற்கடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. ஆனால் இந்த முறை பாகிஸ்தானுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. ஏனென்றால் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானின் மற்றொரு ஹோம் கிரவுண்டாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் பல்வேறு சர்வதேச போட்டிகள் இங்கு தான் நடைபெற்றிருக்கிறது. எனவே பலம் அதிகமாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

இந்நிலையில் இந்திய அணியை எதிர்க்க கூடிய பாகிஸ்தான் அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான இந்த அணியில் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் ஆசிஃப் அலி களமிறங்கவுள்ளனர். பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஃபகார் சமானுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் முன்னதாக பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட அணியிலேயே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Bumrah vs Shaheen யார் சிறந்த Bowler? Mohammad Amir-ன் ஆச்சரியமான பதில்
மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டரில் ஹைதர் அலி, முகமது ரிஸ்வான், இமாத் வாசீம், முகமது ஹஃபீஸ், சதாப் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பாகிஸ்தானின் சீனியர் வீரர் சோயிப் மாலிக்கும் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை ஹாரிஸ் ராயுஃப், ஹசன் அலி மற்றும் சாஹீன் அஃப்ரிடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைவிட்ட பாகிஸ்தான்

கைவிட்ட பாகிஸ்தான்

இந்த அணியில் அனுபவ வீரர்களான முகமது நவாஸ், சர்ஃப்ராஸ் அகமது, முகமது வசீம் ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. இதில் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணியை வழிநடத்தியவர் தான் சர்ஃப்ராஸ் அகமது. தற்போது அவரையே அணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ஸ்குவாட்

பாகிஸ்தான் ஸ்குவாட்

பாபர் அசாம், சதாப் கான், ஆசிஃப் அலி, ஃபாகர் சமான், ஐதர் அலி, ஹாரிஸ் ராயுஃப், ஹாசன் அலி, இமாத் வாசீம் முகமது ஹஃபீஸ், முகமது ரிஸ்வான், சாஹீன் ஷா அஃப்ரிடி, சோய்ப் மாலிக்

Story first published: Saturday, October 23, 2021, 18:22 [IST]
Other articles published on Oct 23, 2021
English summary
Pakistan Announce 12-Member Squad For India Clash in T20 WorldCup; major players missed out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X