For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனவெறி சர்ச்சை.. பரபரப்பு அறிக்கை விட்ட குயிண்டன் டிகாக்.. உண்மையை உணர்ந்த ரசிகர்கள்!

அமீரகம்: இனவெறி சர்ச்சையில் சிக்கிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயிண்டன் டிகாக், விளக்கம் கொடுத்துள்ளார்.

Recommended Video

Quinton de Kock apologised on Racism Issue | Black Lives Matter | OneIndia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் பெயர் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.

அவற்றையெல்லாம் விட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் குயிண்ட டிகாக் செய்த விஷயம் பெரிய பூகம்பத்தை கிளப்பியது.

“குயிண்டன் டிகாக்கின் மோசமான மறுபக்கம்”.. கிளம்பிய இனவெறி சர்ச்சை.. அணியில் இருந்து அதிரடி நீக்கம்! “குயிண்டன் டிகாக்கின் மோசமான மறுபக்கம்”.. கிளம்பிய இனவெறி சர்ச்சை.. அணியில் இருந்து அதிரடி நீக்கம்!

 என்ன காரணம்

என்ன காரணம்

தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கடந்த அக்.26ம் தேதியன்று லீக் போட்டியில் மோதின. ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் வீரர்கள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக மண்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த போட்டியிலும் இரு நாட்டு வீரர்கள சிறிது நேரம் மண்டியிட்டு தங்களது ஆதரவை கொடுத்தனர்.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

ஆனால் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் குயிண்டன் டிகாக் மட்டும் மைதானத்தில் அதனை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், டிகாக் ஒரு இனவெறி பிடித்த நபர். அவரை உடனடியாக அணியில் இருந்து நீக்க வேண்டும் சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து அன்றைய தினம் போட்டியில் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றிருந்த டிகாக் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.

குயிண்டன் டிகாக் விளக்கம்

குயிண்டன் டிகாக் விளக்கம்

இந்நிலையில் இனவெறி குற்றச்சாட்டுக்கள் குறித்து டிகாக் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் மண்டியிட்டு ஆதரவு கொடுக்காததற்கு மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன். கருப்பின மக்களுக்கு துணையாக நிற்கவேண்டும் என்பது எவ்வளவும் முக்கியமெற்ன்று எனக்கும் தெரியும். ஒருவீரராக நல்ல விஷயங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்யவில்லை. அப்படி காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

உருக்கம்

உருக்கம்

நானும் கருப்பின பிரச்னையில் பாதிக்கப்பட்டவன் தான். எனது குடும்பத்தில், 2வது தாயார் கருப்பினத்தை சேர்ந்தவர். எனவே இனவெறி பிரச்னை சர்வதேச அளவில் வெடிப்பதற்கு முன்னர் அதன் தீவிரத்தை சிறுவயதிலேயே நான் உணர்ந்தவன். நான் ஒருவேளை இனவெறி பிடித்தவனாக இருந்திருந்தால் அன்றைய தினம் பொய்யாக மண்டியிட்டுவிட்டு நாடகமாடி இருப்பேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் எப்படிபட்டவன் என்பது எனது அணி வீரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியும்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

நான் ஒரு சுயநலவாதி, யோசிக்க தெரியாதவன், முட்டாள் என்று யாரேனும் கூறியிருந்தால் கூட அது என்னை பெரிய அளவில் பாதித்து இருக்காது. ஆனால் இனவெறி பிடித்தவன் என்று கூறியது வேதனை அளிக்கிறது. இனி வரும் போட்டிகளில் மண்டியிட்டு ஆதரவு கொடுப்பேன் என டிகாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 29, 2021, 11:22 [IST]
Other articles published on Oct 29, 2021
English summary
Quinton de Kock opens up on racism issue, says fine with taking the knee in T20 Worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X