“யாரு சாமி இவங்க?”.. முன்னணி அணிகளை புரட்டி எடுக்கும் சிறிய அணி.. கெத்தாக டி20 உலகக்கோப்பைக்கு வருகை

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிறிய அணி எண்ட்ரி கொடுத்து வருகிறது.

Pakistan Player ஆட்டத்தை பார்க்க சென்ற India வீரர்கள் | Oneindia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கிய அணிகள் இடம்பெற்றுள்ள சூப்பர் 12 பிரிவு போட்டிகள் வரும் அக்.23ம் தேதி முதல் தான் தொடங்குகிறது.

தகுதிச்சுற்று போட்டிகள்

தகுதிச்சுற்று போட்டிகள்

இந்நிலையில் பெரும் அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் சிறிய அணியான ஸ்காட்லாந்து விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தகுதிச்சுற்று போட்டியில் இந்த அணி தனது முதல் போட்டியிலேயே வலுவான வங்கதேசத்தை எதிர்கொண்டது. எப்படியும் தோற்றுவிடும் என்றுதான் அனைவரும் கருதினர். ஆனால் வங்கதேச அணியையே ஆட்டம்காண வைத்தது ஸ்காட்லாந்து.

ஆட்டம்கண்ட வங்கதேசம்

ஆட்டம்கண்ட வங்கதேசம்

கடந்த அக்டோபர் 17ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 140 ரன்கள் தான் எடுத்தது. எனினும் இந்த ஸ்கோரை கூட வங்கதேசத்தை எட்டவிடாமல் ஸ்காட்லாந்து சுருட்டியது. இதனால் வங்கதேசம் அணி 7 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

2வது வெற்றி

2வது வெற்றி

இந்நிலையில் தற்போது தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிகண்டு சூப்பர் 12 வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது ஸ்காட்லாந்து அணி. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில்

பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பெரிங்டன் 70 ரன்களும், மேத்யூவ் கிராஸ் 45 ரன்களும் எடுத்தனர். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்களில் ஆட்டமிழந்தது.

சூப்பர் 12

சூப்பர் 12

ஸ்காட்லாந்து அணி, தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டு சூப்பர் 12 சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளடுஹ். இன்னும் ஒரே ஒரு போட்டியே மீதமுள்ளது. இதிலும் வெற்றியை பெற்றுவிட்டால், கெத்தாக உள்ளே நுழைந்துவிடும். தகுதிச்சுற்றுப்போட்டிகளில் இருந்து மொத்தம் 4 அணிகள் சூப்பர் 12க்கு தேர்வாகும். எனவே நிச்சயம் ஸ்காட்லாந்தும் அதில் ஒருஅணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Scotland Clinch the second victory and made a super 12 chaces brighter in T20 WorldCup
Story first published: Wednesday, October 20, 2021, 9:56 [IST]
Other articles published on Oct 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X