For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பாகிஸ்தானுக்கு ஆப்பு ரெடி”.. இந்திய அணியின் 3 அடுக்கு பாதுகாப்பு வளையம்..பயமின்றி சுத்தும் வீரர்கள்

அமீரகம்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பலகட்ட வேலிகளை அமைத்து அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்ப்பதற்காக பல்வேறு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த இரு அணிகளும் மோதும் போட்டி நாளை துபாய் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

“கோட்டை தாண்டி யாரும் வரக்கூடாது”.. டி20 உலகக்கோப்பையில் செய்யப்பட்ட விநோத ஏற்பாடு. போட்டோ படு வைரல்“கோட்டை தாண்டி யாரும் வரக்கூடாது”.. டி20 உலகக்கோப்பையில் செய்யப்பட்ட விநோத ஏற்பாடு. போட்டோ படு வைரல்

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. எனினும் இந்தாண்டும் இரு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு நீடித்து வருகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியினர் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறும் வார்த்தைகள் தான். அதாவது பாகிஸ்தான் முன்பை விட தற்போது பலமாக உள்ளது. எனவே இந்த முறை இந்தியாவை வீழ்த்திவிடும் எனக்கூறி வருகின்றனர்.

கேப்டனின் ஓவர் நம்பிக்கை

கேப்டனின் ஓவர் நம்பிக்கை

இதே போல இன்று பாகிஸ்தான் கேப்டனும் மிகவும் ஓவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். கடந்த காலங்களை விட்டுத்தள்ளுங்கள். அதனையெல்லாம் நான் மனதில் வைத்துக்கொள்ளவே மாட்டேன். தற்போது நடப்பதை மட்டுமே பேச வேண்டும். இந்த முறை வெற்றி பெற வேண்டும் என சிறப்பான ஃபார்மில் இருக்கிறோம். எனவே வரலாறு மாற்றி அமைக்கப்படும் என ஓவர் கான்ஃபிடன்ஸாக பேசியுள்ளார்.

இந்தியாவின் ஃபார்ம்

இந்தியாவின் ஃபார்ம்

இந்நிலையில் பாகிஸ்தானை துவம்சம் செய்ய பலகட்ட வியூகத்துடன் இந்தியா தயாராக உள்ளது. அமீரகத்தில் கடந்த ஒருமாத காலமாக ஐபிஎல் தொடர் நடைபெற்றது. எனவே வீரர்களுக்கு இந்த களத்தை பற்றி நன்கு தெரிந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோகித், கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவேளை இஷான் கிஷான் கொண்டுவரப்பட்டால், அவரும் அதிரடி ஃபார்மில் இருக்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரை ஜடேஜா, பும்ரா, அஸ்வின், புவனேஷவர் குமார், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் என அட்டகாசமான வரிசையை இந்திய அணி வைத்துள்ளது.

ஓடவிட்ட இந்திய அணி

ஓடவிட்ட இந்திய அணி

நடந்து முடிந்த 2 பயிற்சி போட்டிகளுமே இந்திய அணியின் ஃபார்முக்கு சான்று. இங்கிலாந்துடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி கண்டது. இதில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், கே.எல்.ராகுல் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் கலக்கியிருந்தனர். ஹர்திக் பாண்ட்யாவும் ஃபார்முக்கு திரும்பி வருகிறார். சக்திவாய்ந்த அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவையே ஓடவிட்டது பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆலோசகர்

ஆலோசகர்

இவை அனைத்தையும் விட, இந்திய அணியுடன் தற்போது முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பணியாற்றி வருகிறார். தோனியின் தலைமையில் 3 முறை ஐசிசி கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக அவரின் கீழ் பல முறை பாகிஸ்தானை இந்தியா புரட்டி எடுத்துள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுவதால் இந்தியாவுக்கு தான் வெறி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Story first published: Saturday, October 23, 2021, 18:10 [IST]
Other articles published on Oct 23, 2021
English summary
Team India squad has a 3 powers to beat Pakistan in first match of T20 WorldCup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X