For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எங்களுடன் பெரும் சக்தி உள்ளது”.. டி20 உலகக்கோப்பையில் தோனி.. முதன்முறையாக வாய்திறந்த கோலி!

அமீரகம்: இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி ஆலோசகராக செயல்படவிருப்பது குறித்து கேப்டன் விராட் கோலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

இந்திய டி20 அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்படபோகும் கடைசி தொடர் இதுவாகும். எனவே அவர் கோப்பையை வென்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

 துணை நிற்கும் தோனி

துணை நிற்கும் தோனி

இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். இந்தியாவுக்காக 3 முறை ஐசிசி கோப்பைகளை வென்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. தற்போது ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வென்றுக்கொடுத்துள்ளார். எனவே அவரை இந்திய அணியின் ஆலோசகராக பிசிசிஐ நியமித்துள்ளது.

 மனம் திறந்த கோலி

மனம் திறந்த கோலி

இந்நிலையில் தோனி ஆலோசகராக செயல்படுவது குறித்து விராட் கோலி பேசியுள்ளார். மீண்டும் இந்திய அணியில் இணைவது குறித்து தோனி மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்றுமே எங்களுக்கு ஆலோசகராக தான் இருந்துக்கொண்டு வருகிறார். தற்போது மிகப்பெரும் தொடர்களை அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் எதிர்கொள்வதனால் மீண்டும் அந்த பணியை செய்ய தோனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்களுக்கு புத்துணர்ச்சி

எங்களுக்கு புத்துணர்ச்சி

இத்தனை வருடங்களாக தோனி கற்றுக்கொண்ட அனுபவங்களை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். ஆட்டத்தின் நுணுக்கங்கள், ஆட்டம் எப்படி சென்றுக் கொண்டிருக்கிறது, சிறிய விஷயம் மூலம் அதனை எப்படி நமது பக்கம் கொண்டு வரலாம் என்பதற்கெல்லாம் தோனி பாயின் அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவும். தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வருவது எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும், தூண்டுக்கோலாகவும் இருக்கும்.

Recommended Video

ICC T20 World Cup- Virat Kohli Has His Say On Ind Vs Pak Cricket Rivalry | Oneindia Tamil
இலங்கை வியூகம்

இலங்கை வியூகம்

தலைசிறந்த கேப்டனாக கருதப்படும் தோனியை எப்படி இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டுவந்துள்ளார்களோ, அதனை போலவே இலங்கை கிரிக்கெட் வாரியமும் வியூகம் வகுத்துள்ளது. அந்த அணியின் ஜாம்பவான் மஹிலா ஜெயவர்தனே, இலங்கை அணியின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவரின் பயிற்சியில் அந்த அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இதனால் இந்தியா - இலங்கை இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 17, 2021, 13:08 [IST]
Other articles published on Oct 17, 2021
English summary
Virat Kohli feels MS Dhoni’s presence as mentor gives an extra booster in T20 Worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X