“நான் சிவனேனு தானே இருந்தேன்”.. சுவாரஸ்ய முறையில் அவுட்டான ரஸல்.. கடும் அதிருப்தியடைந்த வீடியோ!

அமீரகம்: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் அவுட்டான விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த தொடரின் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் நேற்று தங்களது முதல் வெற்றியை பெரும் நோக்கில் மோதின.

“கடும் பிரச்னைக்கு இடையே உலக சாதனை” பிரமிப்பூட்டிய ஆஃப்கான் வீரர் ரஷித் கான்.. ரசிகர்கள் பாராட்டு! “கடும் பிரச்னைக்கு இடையே உலக சாதனை” பிரமிப்பூட்டிய ஆஃப்கான் வீரர் ரஷித் கான்.. ரசிகர்கள் பாராட்டு!

முதல் பேட்டிங்

முதல் பேட்டிங்

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பவுலிங் செய்வதாக தெரிவித்தது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஓப்பனர்கள் கிறிஸ் கெயில் (4), எவின் லிவிஸ் (6) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். பின்னர் வந்த ராஸ்டன் சேஸ் (39), நிகோலஸ் பூரண் (40) ரன்கள் விளாச சவாலான இலக்கிற்கு ஆட்டத்தை நகர்த்தி சென்றனர்.

T20 World Cup 2021: Asif Ali blitz, Babar take Pakistan to 5-wicket win over AFG | Oneindia Tamil
மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் ஓபனர்கள் நைம் (17) ஷகிப் அல் ஹசன் (9) ஆகியோர் ஏமாற்றினர். பின்னர் வந்த லிடன் தாஸ் 44 ரன்கள் மற்றும் கேப்டன் முகமதுல்லா 31 ரன்கள் சேர்த்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் வங்கதேச அணி வெற்றிபெற 4 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது லிடன் தாஸ், முகமதுல்லா ஆகியோர்தான் களத்தில் இருந்தார்கள். கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தது. ஆனால், அந்த அணி கடைசி மூன்று ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்த போட்டி மிகவும் எளிதாக முடியவேண்டியதுதான். அதிக இலக்கு வர வேண்டிய போட்டியை ஆண்ட்ரே ரஸலின் வித்தியாசமான அவுட், மாற்றியது. ஆட்டத்தின் 13 ஓவரின் போது டஸ்கின் பந்துவீச, ராஸ்டன் சேஸ் களத்தில் பேட்டிங் செய்தார். மறுமுனையில் ஆண்ட்ரே ரஸல் களமிறங்கினார். அந்த ஓவரின் 3வது பந்தை ஃபுல் லெந்த் பாலாக போட அதனை ரஸ்டன் சேஸ் ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆடினார். அப்போது தான் ஆண்ட்ரே ரஸல் டைமண்ட் டக் அவுட்டானார்.

எப்படி அவுட்

சேஸ் அடித்த பந்து, மறுமுணையில் இருந்த ஸ்டம்புகள் மீது மோதியது. ஆனால் மோதுவதற்கு முன்னதாக டஸ்கினின் கால் நுணியில் மிகவும் லேசாக உரசிச்சென்றது. அப்போது மறுமுனையில் ஒரு பந்தை கூட சந்திக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் கோட்டை தாண்டி வெளியே வந்துவிட்டார். இதனால் அவுட் கொடுக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஸல் கடும் விரக்தியுடன் களத்தை விட்டு வெளியேறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
West Indies Hitter Andre Russell's Bizarre Dismissal in the bangladesh match 0f T20 Worldcup: - Video
Story first published: Saturday, October 30, 2021, 16:44 [IST]
Other articles published on Oct 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X