For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிரான டுவென்டி 20 தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை!

மெல்போர்ன்: மெல்போர்னில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினை மீண்டும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமையன்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அன்று மாலைக்கு மேல் நடந்த ஆடவர் போட்டியிலும் இந்தியாவே அபாரமாக வென்றது நினைவிருக்கலாம்.

T20Is: Indian women create history in Australia with series win

இந்நிலையில் அதனது 2வது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியினை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது இந்திய பெண்கள் அணி.

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியினை அதனுடைய சொந்த மண்ணிலேயே சாய்த்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டி சிட்னியில் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.

Story first published: Friday, January 29, 2016, 13:09 [IST]
Other articles published on Jan 29, 2016
English summary
Indian Women Cricket team creates history as they beat Australian Women cricket team by 10 wickets in second T20 match at Melbourne.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X