இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 11வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுளளன.

தற்போது ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்து வருகிறது.

கேதர் ஜாதவ் வந்தே ஆகனும்.. இளம் வீரரின் சொதப்பலால் வலுக்கும் எதிர்ப்பு..முன்னாள் வீரர் அட்வைஸ்

இந்நிலையில், இன்றைய டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் முக்கிய பிரச்சினை குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஆன்ரிச் நோர்ட்ஜே வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டு போட்டிகள்

இரண்டு போட்டிகள்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெறுகிறது. முதலில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் சென்னையிலும் அடுத்ததாக இரவு 7.30 மணிக்கு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் மும்பையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 பயோ பபுளில் இணைந்த வீரர்

பயோ பபுளில் இணைந்த வீரர்

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் பௌலர் நார்ட்ஜேவிற்கு கொரோனா என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு பின்பு அது பொய்யான பரிசோதனை முடிவு என்று கூறப்பட்டது. ஆயினும் அவர் தன்னுடைய 10 நாட்கள் குவாரன்டைனை முடித்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் அணியின் பயோ பபுளில் இணைந்துள்ளார்.

இன்றைய போட்டியில் பங்கேற்பு

இன்றைய போட்டியில் பங்கேற்பு

முன்னதாக அவருக்கு 3 முறை கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முக்கிய பங்கு வகிக்கும்

இதனிடையே, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள நோர்ட்ஜே, இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று நோர்ட்ஜே தெரிவித்துள்ளார். அதனால் முன்னதாக திட்டமிட வேண்டியவற்றை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

சோர்வை அளித்த தனிமை

சோர்வை அளித்த தனிமை

கடந்த10 நாட்களாக தனிமையில் இருந்தது மிகவும் சோர்வை அளித்துள்ளதாகவும் தற்போது மீண்டும் விளையாடுவது உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த இரு போட்டிகளிலும் டெல்லி கேபிடல்ஸ் சிறப்பான ஆட்டத்தை அளித்ததாகவும் ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அதிகமான ஸ்கோர் அடிக்க தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
We definitely did well in both the games -Anrich Nortje
Story first published: Sunday, April 18, 2021, 17:02 [IST]
Other articles published on Apr 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X