For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அதே ரத்தம்.. அப்படிதான் இருக்கும்" பயிற்சி போட்டியிலேயே சதம்.. ஆஸி.யில் அசத்திய சந்தர்பால் மகன்!

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் சதம் விளாசியுள்ளார்.

ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் பயம் பற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

அந்த வரிசையில் கடைசியாக அனைத்து நாட்டு ரசிகர்களும் ரசித்து கொண்டாடிய பேட்ஸ்மேன் ஷிவ்நரைன் சந்தரபால். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் சந்தர்பால், பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டி வித்தை காட்டுவார். இவரது கிளாசிக் பேட்டிங்கை ரசிகர்கள் அதிகமாக ரசித்து கொண்டாடினர்.

சந்தர்பால் மகன்

சந்தர்பால் மகன்

சந்தர்பால் சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அதிகமாகவே ஆட்டம் கண்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கியுள்ளார்.

சதம் விளாசிய சந்தர்பால்

சதம் விளாசிய சந்தர்பால்

பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய தேஜ்நரைன் சந்தர்பால், ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமான விளையாடி சதம் விளாசினார். இடதுகை பேட்ஸ்மேனான தேஜ்நரைன் சந்தர்பால், 293 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 119 ரன்கள் சேர்த்துள்ளார்.

 வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தேஜ்நரைன் சந்தர்பாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசியுள்ள தேஜ்நரைன் சந்தர்பால், 73.16 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் தேக்நரைன் சந்தர்பால் செயல்பாடுகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

 மாற்றிக் காட்டுவாரா?

மாற்றிக் காட்டுவாரா?

சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் பெரிய அளவில் சோபிக்க தவறி வந்துள்ளனர். இதனை ஷிவ்நரைன் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் மாற்றிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஷிவ்நரைன் சந்தர்பால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 24, 2022, 20:49 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
Tagenarine Chanderpaul, son of West Indies legend Chanderpaul, scored a century in the practice match against Australia's Prime Minister's XI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X