For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி.. காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை- முழு விவரம்

ஃப்ளோரிடா: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட வீராங்கனைக்கு விளையாட வாய்ப்பு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs AUS Final கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி *Cricket

காமன்வெல்த்-ல் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை எதிர்பார்க்கவே இல்லையே.. வெஸ்ட் இண்டீஸுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயாஸ்..5வது டி20ல் 189 ரன்கள் இலக்கு இதை எதிர்பார்க்கவே இல்லையே.. வெஸ்ட் இண்டீஸுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயாஸ்..5வது டி20ல் 189 ரன்கள் இலக்கு

திடீர் தாமதம்

திடீர் தாமதம்

இந்த போட்டிக்கான டாஸ் இரவு 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சூழலில் தாமதமானது. மழைப்பொழிவு, வெளிச்சமின்மை என எந்தவொரும் பிரச்சினையும் இன்றி டாஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் குழம்பினர். எனினும் டாஸ் தாமதமானாலும், திட்டமிட்டபடியே போட்டி 9.30 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில் இந்த குழப்பத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக கொரோனா பரிசோதனை எடுப்பது வழக்கம். அந்தவகையில் இன்று எடுக்கப்பட்ட சோதனையில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மெக்ரத்திற்கு கொரோனா உறுதியானது. மேலும் அவருக்கு அறிகுறிகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.

தனிமைப்படுத்துதல்

தனிமைப்படுத்துதல்

நீண்ட நேரமாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தஹிலா விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து தேசியகீதம் ஒலிக்கப்பட்ட போது, அவர் அணியினருடன் களத்தில் இல்லாமல் வெளியே இருந்தார். இதே போல டக் அவுட்டில் தனியாக மாஸ்க் அணிந்தவாறு இருந்தார். தனது பேட்டிங்கிற்கு மட்டுமே வந்து செல்ல அனுமதி கிடைத்தது.

அடித்த ஸ்கோர்

அடித்த ஸ்கோர்

இத்தனை பிரச்சினைகளுக்கு இடையே முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது. கொரோனா பாதிப்புடன் விளையாடிய தஹிலா மெக்ராத் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

Story first published: Sunday, August 7, 2022, 23:33 [IST]
Other articles published on Aug 7, 2022
English summary
Tahlia McGrath in CWG final ( காமன்வெல்த் கிரிக்கெட் இறுதிப்போட்டி ) காமன்வெல்த் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை தாஹ்லியா கொரோனா பாதித்தபோதும் விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X