For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!

சிட்னி: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் மிக மோசமான யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் வாய்ப்புகள் உருவாகி உள்ளதால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மோசமான யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பிரிஸ்போன் டெஸ்ட் போட்டி தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. கடைசி டெஸ்டின் கடைசி செஷனில் எந்த அணி வெற்றிபெறும் என்ற முடிவு தெரியும் என்பதால் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதல் உச்ச கட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது.

புஜாரா ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. பரபரப்பு! புஜாரா ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. பரபரப்பு!

டீ பிரேக் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. மீதம் இருக்கும் 27 ஓவரில் 145 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

 கட்டாயம்

கட்டாயம்

ஆஸ்திரேலிய அணி இந்த 27 ஓவரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் எந்த அணி இந்த தொடரை வெல்லும் அல்லது ஆட்டம் டிரா ஆகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணி வீரர்களை தாக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள்.

 பவுலிங்

பவுலிங்

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறி வைத்து தாக்கும் வகையில் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். தலையை குறி வைத்து அடுத்தடுத்த பீமர், நெஞ்சை குறி வைத்து பவுன்சர் என்று ஆஸ்திரேலிய பவுலர்கள் மோசமான யுக்தியை கையில் எடுத்துள்ளனர். அதிலும் புஜாராவை காலி செய்ய வேண்டும் என்றே ஹெல்மெட்டை குறி வைத்து ஆஸி. பவுலர்கள் தாக்கினார்கள்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

புஜாரா விக்கெட்டை எடுக்க முடியவில்லை என்றால் அவரை தாக்குங்கள் என்று ஷேன் வார்னே போன்ற முன்னாள் வீரர்கள் சொல்லும் அளவிற்க்கு ஆஸ்திரேலிய அணி கடும் விரக்தியில் உள்ளது. இதுவரை கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததே இல்லை. இன்று அந்த வரலாறு மாற வாய்ப்புள்ளது.

 வரலாறு

வரலாறு

இந்திய அணி வெற்றிபெற்றுவிட கூடாது என்பதால் தற்போது வீரர்களை தாக்கி வீழ்த்தும் வித்தையை ஆஸ்திரேலிய அணி கையில் எடுத்துள்ளது. இதனால்தான் இன்று புஜாரா இரண்டு முறை காயம் அடைந்தார், ரஹானே ஒருமுறையும், பண்ட் ஒருமுறையும் காயம் அடைந்தார்.

போராட்டம்

போராட்டம்

ஆனால் இவ்வளவு காயங்களையும் மீறி இந்திய அணி தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது. இந்த போட்டியில் முடிவு எப்படி இருந்தாலும் ஆட்ட ரீதியாக இந்தியா எப்போதோ வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்திய அணியின் மிகசிறந்த டெஸ்ட் அணிகளில் ஒன்றாக இப்போது இருக்கும் அணி கண்டிப்பாக பார்க்கப்படும்.

Story first published: Tuesday, January 19, 2021, 12:51 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Take a wicket or Knock them Out: Australians nasty tactic to control team India players in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X