For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Exclusive: ஹர்திக் பாண்ட்யா தமிழரா?.. பல வருஷத்துக்கு முன்பு.. - அமெரிக்க தமிழ் ஆய்வாளர்

சென்னை: நம்ம கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா பெயரில் 'பாண்ட்யா' என்ற ஸ்லாங், நம்மூர் பேரு மாதிரி இருக்கே என்று ஆச்சர்யப்பட்டு ஆராயப்பட்டதில் கிடைத்த சில சர்பிரைஸ் தகவல்கள் இங்கே.

இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர். பவுண்டரிகள் இவரது ஸ்நாக்ஸ். சிக்ஸர்கள் இவருக்கு பிடித்த மீல்ஸ். ஸ்டிரைக் ரேட், இவரிடம் தினமும் குட்மார்னிங் சொல்லும்.

தொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்கதொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்க

ஆவரேஜ், காலரை தூக்கி விட்டு, வந்த மழை, போனா ...... என்று கூலாக நக்கலடிக்கும். இத்தனைக்கும் சொந்தக்காரர் ஹர்திக் பாண்ட்யா!. இன்றைய நிலவரப்படி இந்திய அணியின் சொத்து.

 பாண்ட்யா எப்படி?

பாண்ட்யா எப்படி?

1993-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் தான் ஹர்திக் பாண்ட்யா பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஹிமன்ஷு பாண்ட்யா. வட இந்தியராக இருந்தாலும், இவரது குடும்பத்தின் பட்டப் பெயர் 'பாண்ட்யா' என்று உள்ளது. கேட்பதற்கு தமிழ்ச் சொல்லான 'பாண்டியா' போலவே இது இருப்பது சற்று வியப்பே!. இதுகுறித்து நாம் ஆராய்ந்த போது, ஆச்சர்யம் அளிக்கக்கூடிய சில தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

 டிராவிட் பெயர்க் காரணம்

டிராவிட் பெயர்க் காரணம்

குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் வரலாற்று ஆய்வாளர் சந்தானம் சுவாமிநாதன் நம்மிடம் இதுகுறித்து கூறுகையில், "முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட் என அடைமொழி வந்தது தெரியுமா? ஏனெனில், இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி தான் அழைப்பார்கள்.

 இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பார்கள். இதுகுறித்த உறுதியான ஆதாரம் இல்லையென்றாலும், பாண்ட்யா என்று அழைக்கப்படுவதற்கு இதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது" என்றார்.

 ஹர்திக் மூதாதையர்கள்

ஹர்திக் மூதாதையர்கள்

இதனால் தான் குஜராத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் குடும்பத்தின் பட்டப்பெயர் பாண்ட்யா என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஹர்திக்கின் மூதாதையர்கள் பண்டைய தமிழகத்தில் இருந்த பாண்டிய தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள், பல வருடங்களுக்கு முன்பாகவே பாண்டிய தேசத்தில் இருந்து குஜராத்திற்கு தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதும் பணிக்காகவோ சென்று பின் அங்கேயே குடிப்பெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

 பல ஒற்றுமைகள்

பல ஒற்றுமைகள்

மேலும் அவர் கூறுகையில், "இன்றும் லண்டன், அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த பலரும் பாண்ட்யா என்ற அடைமொழியோடு வசிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கே பாண்ட்யா என்கிற பெயர் எப்படி வந்தது, எதனால் வந்தது என்பதே தெரியவில்லை. குஜராத்தில் வசிக்கும் பிராமணர்களுக்கும், தென்னிந்தியாவைச் சேர்ந்த பிராமணர்களுக்கும் இடையேயான பல ஒற்றுமைகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

Story first published: Thursday, May 13, 2021, 23:01 [IST]
Other articles published on May 13, 2021
English summary
what is pandya name origin and history - ஹர்திக் பாண்ட்யா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X