For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த ஸ்பார்க்கை கூட பார்க்க முடியலைன்னா.. எதுக்கு கேப்டனா இருக்கணும்.. இப்படி மாட்டிகிட்டாரே தோனி!

சென்னை: நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் ஆடிய விதம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு இந்த தொடர் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது.

2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் கோலி..இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் தமிழக வீரர்கள் 2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் கோலி..இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் தமிழக வீரர்கள்

இந்த தொடர் முழுக்க தமிழக அணிதான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தமிழக அணி தோல்வி அடையவில்லை.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் லீக் ஆட்டங்களில் ஜெகதீசன் மிகவும் சிறப்பாக ஆடினார். ஒன் டவுன் பேட்ஸ்மேனான இவர் தமிழக அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு போட்டியிலும் பெரிய அளவில் உதவினார்.

 வீரர்கள்

வீரர்கள்

இன்னொரு பக்கம் ஆங்கர் பேட்ஸ்மேன் பாபா அபராஜித் அமைதியாக களத்தில் உறுதியாக நின்று ஒவ்வொரு முறையும் தமிழக அணியின் வெற்றிக்கு உதவினார். தமிழக அணி பல போட்டிகளில் சரிவை சந்திப்பதில் இருந்து காப்பாற்றியவர் பாபா அபராஜித்தான்.

திறமை

திறமை

இது போக இன்னொரு பக்கம் தமிழக வீரர் சாய் கிஷோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். எல்லா போட்டியிலும் இவர் குறைந்தது 2 விக்கெட்டாவது எடுத்தார். 4 ஓவர்களை வீசி மிக குறைந்த ரன்களை கொடுத்த விக்கெட்டுகளை அள்ளினார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த மூன்று வீரர்களில் ஜெகதீசன் , சாய் கிஷோர் இரண்டு பேரும் சிஎஸ்கே வீரர்கள். அபராஜித் முன்னாள் சிஎஸ்கே வீரர். இவர்கள் சிஎஸ்கேவில் தொடர்ந்து தோனி மூலம் புறக்கணிக்கப்பட்ட வீரர்கள். இவ்வளவு திறமை இருந்தும் கூட தோனி இவர்களுக்கு ஒருமுறை கூட முறையான வாய்ப்பு கொடுத்தது இல்லை.

ஜெகதீசன்

ஜெகதீசன்

ஜெகதீசனாவது இரண்டு போட்டிகளில் ஆடினார். சாய் கிஷோர் அந்த வாய்ப்பும் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். கேட்டால் இவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி ஓரம்கட்டியுள்ளார். வலைப்பயிற்சியில் செயல்படுவதை பார்த்து இவர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு கீழ் தமிழக அணியை வெற்றிபெற வைத்தது இவர்கள்தான்.

கேள்வி

கேள்வி

இதனால் தோனி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இளம் வீரர்கள் இவ்வளவு திறமையாக இருக்கிறார்கள். இவர்களிடம் ஸ்பார்க்கை பார்க்கவில்லை என்றால் என்ன நியாயம். பிறகு எதற்கு தோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்று பலர் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, February 2, 2021, 10:19 [IST]
Other articles published on Feb 2, 2021
English summary
Tamilnadu players performance in Syed Mushtaq Ali Cup gives headache to Dhoni captaincy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X