For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி செய்யறதைப் பார்த்து ரொம்ப அவமானமா இருந்துச்சு.. மனதில் இருந்ததை போட்டு உடைத்த வங்கதேச கேப்டன்!

தாகா : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் பார்த்து தான் அவமானப்பட்டதாக வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் மனம் திறந்து பேசி உள்ளார்.

Recommended Video

Tamim Iqbal feels ashamed of watching Kohli’s gym training

இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன், வெற்றிகளை குவித்த கேப்டன், இந்திய அணியை தரவரிசைகளில் முன்னணியில் வைத்திருப்பவர் என பல்வேறு பெருமைகளை கொண்டுள்ளார்.

அதற்காக விராட் கோலி கடுமையாக உழைக்கிறார். குறிப்பாக உடற்பயிற்சிகள் செய்து தன் உடலை சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கான தகுதியுடன் வைத்துக் கொள்கிறார்.

பேந்த பேந்த முழித்த வீரர்.. கடும் கோபத்தில் செமயாக திட்டிய விவிஎஸ் லக்ஷ்மன்.. ஷாக் சம்பவம்!பேந்த பேந்த முழித்த வீரர்.. கடும் கோபத்தில் செமயாக திட்டிய விவிஎஸ் லக்ஷ்மன்.. ஷாக் சம்பவம்!

பாதி கூட செய்வதில்லை

பாதி கூட செய்வதில்லை

அந்த விஷயத்தில் தான் தமிம் இக்பால் விராட் கோலியைப் பார்த்து அவமானப்பட்டுள்ளர். இது பற்றி அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். கோலி செய்வதில் தான் பாதி கூட செய்வதில்லை எனவும் அவர் வெளிப்படையாக கூறி உள்ளார்.

ஒரே வயது

ஒரே வயது

விராட் கோலி 2008இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அவருக்கு முன்பே 2007இல் வங்கதேசஅணியில் அறிமுகம் ஆனார் தமிம் இக்பால். இருவருக்கும் தற்போது 31 வயது தான் ஆகிறது. ஆனால், கிரிக்கெட்டில் செய்த சாதனைகளை வைத்துப் பார்த்தால் இருவருக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

உடலை உறுதி ஆக்கினார்

உடலை உறுதி ஆக்கினார்

விராட் கோலி தன் துவக்க காலத்தில் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் உடற்தகுதியில் அவர் மற்ற வீரர்களைப் போன்றே இருந்தார். இடையே அவர் பார்ம் அவுட் ஆனதாக விமர்சனம் எழுந்த போது கடுமையாக உழைக்கத் துவங்கிய அவர் உடற்பயிச்சி மூலம் தன் உடலை உறுதி ஆக்கினார்.

சிறந்த உடற்தகுதி

சிறந்த உடற்தகுதி

அதன் பின் எப்போதும் பார்ம் இழக்காத அவர், காயம் ஏற்படாமலும் கிரிக்கெட் ஆடி வருகிறார். இந்திய அணியில் சிறந்த உடற்தகுதி கொண்ட வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். கேப்டனே இப்படி இருந்தால் மற்ற வீரர்கள்?

இடம் வேண்டும் என்றால்..

இடம் வேண்டும் என்றால்..

மற்ற இந்திய வீரர்களும் அணியில் இடம் வேண்டும் என்றால் உடற்தகுதியை பேண வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். அதன் காரணமாகவே இந்திய அணி இன்று முன்னணி அணியாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில், தமிம் இக்பால் இந்தியா - வங்கதேச கிரிக்கெட் அணிகளின் உடற்தகுதி அணுகுமுறை பற்றி பேசினார். "உடற்தகுதி விஷயத்தில் இந்திய அணியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் வங்கதேச கிரிக்கெட்டை அதிகம் பாதித்துள்ளது." என்றார்.

எனக்கு அவமானமாக இருந்தது

எனக்கு அவமானமாக இருந்தது

"இதை சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. இது வெளியே தெரிய வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். 2 - 3 ஆண்டுகளுக்கு முன் நான் விராட் கோலி ஜிம், ஓடுவது என தீவிர பயிற்சி செய்வதை பார்ப்பேன். அப்போது உண்மையில் எனக்கு அவமானமாக இருந்தது." என்றார் தமிம் இக்பால்.

சாதனைகள் செய்த பின்னும்..

சாதனைகள் செய்த பின்னும்..

"என் வயதை ஒத்த வீரர் சாதனைகள் செய்த பின்னும் கடுமையாக உழைக்கிறார். ஆனால், நான் அவர் செய்வதில் அதில் பாதி கூட உழைக்கவில்லை." என தான் விராட் கோலியின் உழைப்பை பார்த்து அவமானப்பட்டதாக கூறினார் தமிம் இக்பால்.

முக்கிய கருத்து

முக்கிய கருத்து

வங்கதேச அணியின் கேப்டனாக இருக்கும் தமிம் இக்பால் இப்படி கூறி இருப்பது வங்கதேச கிரிக்கெட்டில் முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. வங்கதேச அணி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அவர்கள் உச்ச நிலையை எட்ட என்ன தேவை என்பதையே தமிம் இக்பால் கூறி உள்ளார்.

Story first published: Wednesday, June 3, 2020, 12:38 [IST]
Other articles published on Jun 3, 2020
English summary
Tamim Iqbal feels ashamed of watching Kohli’s gym training
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X