For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலவச ஐபிஎல் டிக்கெட்களை விற்று வரி ஏய்ப்பு! ஒரு வருடம் கழித்து கண்டுபிடித்த ராஜஸ்தான் அரசு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில அரசின் வருவாய் துறை கடந்த ஆண்டு ஐபிஎல் டிக்கெட்கள் விற்பனையில் நடந்த வரி ஏய்ப்பை கண்டுபிடித்துள்ளது.

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி சுமார் 3.25 கோடி வரை வரி எய்ப்பு நடந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அவரு விளையாடலாம்... இவரு விளையாடலாம்... நான் விளையாடக்கூடாதா? நச்சென்று கேட்ட அந்த வீரர் அவரு விளையாடலாம்... இவரு விளையாடலாம்... நான் விளையாடக்கூடாதா? நச்சென்று கேட்ட அந்த வீரர்

28% ஜிஎஸ்டி வரி

28% ஜிஎஸ்டி வரி

ஐபிஎல் 2018 தொடரின் போது அதன் டிக்கெட் விற்பனை அனைத்தும் ஜிஎஸ்டி கட்டுப்பாட்டில் வந்தது. அதன் படி கடந்த ஆண்டு டிக்கெட் விற்பனையில் 28% வரி கட்ட வேண்டும்.

காம்ப்ளிமெண்டரி டிக்கெட்கள்

காம்ப்ளிமெண்டரி டிக்கெட்கள்

ஆனால், ராஜஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒருங்கிணைத்த ராயல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனம், சுமார் 65,207 டிக்கெட்களை இலவச "காம்ப்ளிமெண்டரி" டிக்கெட்களை விற்றுள்ளது.

எவ்வளவு வரி?

எவ்வளவு வரி?

அந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை இந்த விற்பனை நடந்துள்ளது. இலவச டிக்கெட்களை 11.62 கோடிக்கு விற்றதற்கு, 28% ஜிஎஸ்டி வரியாக சுமார் 3.25 கோடி செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

அபராதம் மற்றும் வட்டி

அபராதம் மற்றும் வட்டி

இந்த வரித் தொகையுடன் அபராதம் மற்றும் வட்டி சேர்த்து சுமார் 7 கோடி வரை பெற வேண்டும் என ராஜஸ்தான் மாநில வருவாய் துறை, வணிக வரித் துறைக்கு தெரிவித்துள்ளது. மேலும், வீரர்கள் ஏலத்தில் வரி ஏய்ப்பு உள்ளதா என்பதையும் முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

மாநில அரசுகள் விழிக்குமா?

மாநில அரசுகள் விழிக்குமா?

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அம்பலமாகியுள்ள இந்த வரி ஏய்ப்பு மற்ற மாநிலங்களிலும் நடைபெற்று இருக்கலாம் எனும், நிலையில் மாநில அரசுகள் விழிக்குமா? விசாரணை செய்யுமா? குறைந்த பட்சம் இந்த ஆண்டுக்கான டிக்கெட் விற்பனையின் போது விழிப்புடன் செயல்படுமா?

Story first published: Saturday, March 16, 2019, 17:55 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Tax evasion identified in IPL ticket sales in Rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X